சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

சிவனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

Added : பிப் 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கேள்வி: விஸ்வேஷ்வரன், வைத்தீஸ்வரன், ஷிவா, காலா, ஷம்போ, ஈஸ்வரன், ஆதியோகி என சிவனுக்கு ஏராளமான பெயர்கள் வர காரணமென்ன?சத்குரு: ஷிவா என்ற வார்த்தை இரண்டு விதங்களில் குறிக்கப்படுகிறது. ஒரு நிலையில் நாம் ஷிவா என்று கூறும்போது, படைப்பிற்கு மூலமாக இருக்கின்ற அந்த எல்லையற்ற வெறுமையைக் குறிக்கின்றோம். வானத்தைக்கூட அண்ணாந்து பார்த்தால், பரந்த வெற்றுவெளியைத்தான் நீங்கள்
சிவனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

கேள்வி: விஸ்வேஷ்வரன், வைத்தீஸ்வரன், ஷிவா, காலா, ஷம்போ, ஈஸ்வரன், ஆதியோகி என சிவனுக்கு ஏராளமான பெயர்கள் வர காரணமென்ன?

சத்குரு: ஷிவா என்ற வார்த்தை இரண்டு விதங்களில் குறிக்கப்படுகிறது. ஒரு நிலையில் நாம் ஷிவா என்று கூறும்போது, படைப்பிற்கு மூலமாக இருக்கின்ற அந்த எல்லையற்ற வெறுமையைக் குறிக்கின்றோம்.

வானத்தைக்கூட அண்ணாந்து பார்த்தால், பரந்த வெற்றுவெளியைத்தான் நீங்கள் காண்கிறீர்கள். முக்கியமாக பிரபஞ்சம் என்பது பரந்த வெற்றுவெளியாகவும், ஒரு சிறிதளவு படைப்பாகவும் இருக்கிறது. மனிதக் கண்களால், வெறும் கண்களால் அல்ல, ஹப்பில் தொலைநோக்கியால் நூறு இலட்சம் கோடிக்கும் அதிகமான பால்வெளிகளை அடையாளம் கண்டுள்ளனர். அவைகள் நட்சத்திரங்கள் மட்டும் அல்ல, பால்வெளிகளே அவ்வளவு எண்ணிக்கையில் உள்ளன.
ஒவ்வொரு பால்வெளியும் இலட்சம் கோடி நட்சத்திரங்களுடன் இருப்பதுடன், அவை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இப்போதைக்கு இவைகளைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது என்று வானவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வளவு படைப்பு இருந்தாலும், அதைத் தாங்கிப் பிடித்திருக்கும் பரந்தவெளியுடன் ஒப்பிட்டால் படைப்பு ஒரு சிறு துளியாகத்தான் இருக்கிறது. ஆகவே, இதற்கு அடிப்படையாக இருக்கின்ற அந்த வெற்றுவெளி, ஷிவா என்று குறிக்கப்படுகின்றது. ஷிவா என்றால் “எது இல்லையோ அது.” அதே சமயத்தில், ஆதியோகியையும் நாம் ஷிவா என்று குறிப்பிடுகிறோம். ஏனென்றால் அவர் அதை உள்வாங்கிக் கொண்டார்.

நீங்கள் உள்வாங்குவது என்னவாக இருந்தாலும், அதுவும் உங்களில் ஒரு பகுதியாகிவிடுகிறது.
நீங்கள் ஏதோ ஒன்றை உள்வாங்கிய காரணத்தால், இன்றைக்கு ஏதோ ஒன்றாக உங்களையே நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு விமானஓட்டி என்று அழைத்துக்கொள்வது ஏன்? ஒரு விமானத்தைப் பறக்க வைப்பது எப்படி என்பதை நீங்கள் உள்வாங்கிக் கொண்டீர்கள், அப்படித்தானே?

நீங்கள் கிரகித்துக்கொள்ளும் எதுவும் உங்களின் ஒரு பகுதியாகிவிடுகிறது, அவ்வளவுதான். ஆதியோகி ஒன்றும் இல்லாத தன்மையை உள்வாங்கிக்கொண்டார், அதனால் நாம் அவரை ஷிவா என்றழைக்கிறோம். மேலும், நாம் ஷிவாவைக் குறித்துப் பேசும்போது - நாம் வெற்றுவெளியைக் குறித்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய அதேநேரத்தில், ஆதியோகியைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் இருவருக்கும் இடையில் நாம் கோடு போடுவதில்லை. புரிந்துகொள்ளப்படும் எதுவும், புரிந்துகொள்பவரும் வேறுவேறு அல்ல. இது ஒரு மனிதன் என்ற நிலை, அது முடிவில்லாத ஒரு வெறுமை நிலை, ஆனால் அங்கே வேறுபாடு இல்லை. ஏனென்றால் அவர் அதை கிரகித்துக்கொண்டார்.

நம்முடைய நாய்க்குக்கூட ஷிவா என்று நம் நாட்டில் நாம் பெயர் வைப்பதுண்டு. நமது நாயை ஷிவா என்று நாம் அழைக்கிறோம், “ஷிவா” வை நாம் அவமதிப்பதாக நாம் உணர்வதில்லை. ஏனென்றால் நாயையும்கூட நாம் ஷிவா என்று புரிந்துகொள்கிறோம். ஏனெனில், ஷிவா என்று நாம் குறிப்பிடும் அந்தத் தன்மையின் விளையாட்டு இல்லாத ஒரு அணுக்கூட இல்லை. ஒவ்வொன்றிலும், அந்த வெறுமைத்தன்மை, படைப்பின் அந்த மூலம் இருக்கின்றது. அதன் காரணமாகத்தான், அது எந்தவிதமாக நிகழ்கிறதோ அந்தவிதமாக படைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்பின் ஒவ்வொரு பகுதியிலும், அது எவ்வளவு சிறியதோ அல்லது பெரியதோ, படைப்பின் மூலம் தொடர்ந்து தன் விளையாட்டை அதில் நிகழ்த்தியவாறு உள்ளது.

அப்படியாயின் ஷிவாவின் வடிவங்கள் எத்தனை? ஷிவாவின் வடிவங்கள் கோடான கோடி உள்ளன. ஆனால் இந்த எல்லா வடிவங்களும் ஏழு அடிப்படையான வடிவங்களிலிருந்து உருவெடுத்துள்ளன.

தொன்றுதொட்டு, “ஈஸ்வரன்” என்ற பெயரில் நாம் அழைப்பது அவனது ஒரு வடிவத்தை. கள்ளங்கபடமில்லாத மற்றொரு வடிவம் “போலா” என்றழைக்கப்படுகிறது. ஒரு குழந்தையைவிட வெகுளித்தனமானவர் போலா. அடுத்ததாக சுபிக்ஷமான ஒருவர் “ஷம்போ” என்றழைக்கப்படுவது. அடுத்ததாக காலத்தைக் குறிப்பவராக, மிகவும் ஆழமான பரிமாணமாகிய “காலா” அல்லது “மஹாகாலா” இருக்கிறார்.

காதல் வசீகரம் பொருந்திய “சுந்தரேசன்” அல்லது “சுந்தரமூர்த்தி” மற்றும் அனைத்துக் கலை வடிவங்களின் வெளிப்பாடாக இருக்கும் “நடேசன்.” கலை என்று நாம் கூறும்போது, யோகத்தில் கலை என்பது வான சாஸ்திரம், கணிதம், நடனம், இசை மற்றும் மனிதர் திறனுக்குட்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த ஏழு வடிவங்களும் ஒவ்வொன்றும் பதினாறாகப் பெருகி, மொத்தமாக நூற்றுப்பன்னிரண்டு வடிவங்கள் ஆகின்றன. அவை மென்மேலும் பல்கிப்பெருகி இலட்சக்கணக்கான வடிவங்களாகின்றன.

ஆகவே ஷிவாவைக் குறிப்பிடும் மற்ற எல்லா பெயர்களும் மற்றும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு படைப்பும் அந்த ஒன்றுமில்லாத தன்மையிலிருந்து வெளிப்பட்டதுதான், அப்படித்தானே? இன்றைக்கு இது அறிவியல்பூர்வமான உண்மையாக இருக்கிறது. அது என்னவாக இருந்தாலும், உலகத்தில் உள்ள அனைத்தும் இதிலிருந்து வந்தவைதான்.

ஒரு குகையைப் பார்த்தால் நாம் குகேஸ்வரன் என்போம், உலகத்தைப் பார்த்தால் நாம் விஸ்வேஷ்வரன் என்போம், மேகத்தைப் பார்த்தால் மேகநாதன் என்று கூறுவோம். படைப்பில் காணும் ஒவ்வொன்றையும் நாம் அவனாகவே உருவகிக்கிறோம். மனிதரின் புரிதலுக்காக உருவகம் முக்கியமாக இருக்கிறது என்பதுடன் அதன்பொருட்டு குறிப்பிட்ட பாரம்பரியங்களையும் நாம் உருவாக்கினோம். தஞ்சைப் பகுதிகளுக்குச் சென்றால், சிவனுக்கென்று நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கின்றன.

அவரை ஒரு மருத்துவராக உருவகிக்கும் வைத்தீஸ்வரன் கோவில். வைத்தீஸ்வரன் கோவில் என்றால், சிவன் இங்கே ஒரு மருத்துவராக அமர்ந்தார். ஆகவே அந்தப் பாரம்பரியம் - அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களின் விதம், சடங்குகளின் விதம், அவருடன் அவர்கள் என்ன செய்கின்றனர் - அது தொடர்ந்து பராமரிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே சில குடும்பங்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதுடன், ஆயிரக்கணக்கான வருடங்களாக அதை பராமரித்து வந்துள்ளனர். இப்போது கடந்த 20ம் நூற்றாண்டின் இறுதிகளில் மற்றும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்தப் பாரம்பரியங்கள் சீர்குலைந்து கொண்டிருக்கின்றன.

இந்தவிதமாக வடிவங்களை உருவாக்கியதனால் மக்களால் அதைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. முக்கியமாக, கோடிக்கணக்கான வழிகளில் வெளிப்பாடு காணும் படைப்பின் மூலத்தை நாம் இங்கே முன்னிலைப்படுத்துகிறோம். சிவனின் கோடிக்கணக்கான வடிவங்களை உருவாக்குவதற்கு நமக்குக் காலம் போதாத காரணத்தால், ஒரு சில ஆயிரம் வடிவங்களை மட்டும் உருவாக்கினோம். மக்களுக்கு ஆரோக்கியம் தேவை, நல்வாழ்வு தேவை, வெற்றி தேவை, மக்களுக்கு முக்திகூடத் தேவை. எல்லாமே கிடைத்துவிட்டால், பிறகு அவர்கள் முக்தியைத் தேடுகின்றனர். அதனால் நமக்கு முக்தீஷ்வரர், யுக்தீஷ்வரர் இருக்கின்றனர். நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதற்கேற்ற விதமான சிவனின் வடிவத்தை நாடுகிறீர்கள்.

அப்படியென்றால், எங்கேயோ உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவராக இவர் இருக்கிறாரா? இது யாரோ ஒருவரைப் பற்றி அல்ல. எந்த ஒருவர் மீதும் நமக்கு ஆர்வமில்லை. படைப்பிற்கு அடிப்படையாக இருக்கும் ஒரு பரிணாமத்தைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கு ஒரு குறிப்பிட்ட அதிர்வலையை, ஒரு குறிப்பிட்ட வடிவத்தை வழங்கும் விஞ்ஞானத்தை நாம் வெளிப்படுத்தினோம்.

வாழ்வின் ஒரு குறிப்பிட்ட அம்சம் ஒரு உயிரோட்டமான வடிவமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த வடிவம் ஷிவாவின் வடிவமாக குறிப்பிடப்படுகிறது. மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இது உருவாக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட விதத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பமாகவே இருக்கிறது. இது தன்னியல்பான ஒரு தொழில்நுட்பமாக இருக்கும் காரணத்தால், அதை நீங்கள் உணர வேண்டுமென்றால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதை உணரமாட்டீர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
18-பிப்-202018:49:49 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் அறிவாளிகள் இறைவனை 33 பெயர்களை கொண்டு அழைக்கிறார்கள், எத்தனை பெயர்களை கொண்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே - ரிக் வேதம்
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
18-பிப்-202017:47:22 IST Report Abuse
K.P  SARATHI நீங்கள் சிவனை கடவுள் என்று சொல்வதில்லை அவரை மகா குரு என்று சொல்கிறீர்கள், அவருடைய புராணங்கள் திருவிளையாடல்களை எங்கும் சொல்வதில்லை ஏன்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
18-பிப்-202005:41:46 IST Report Abuse
meenakshisundaram சிவனுக்குக் மாத்திரம் இல்லை -Vishnu சஹஸ்ரநாமமும் இருக்கே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X