அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் திமுக எம்.பி.,

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (133)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'டிவி சேனல்கள் மும்பை விபசார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாகப் பதவி ஏற்றது, தி.மு.க., போட்ட பிச்சையில் தான். கோவில்களில் தி.மு.க.,வினர் போடும் காணிக்கை பணத்தில்தான், பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது' என, சர்ச்சைக்குரிய வகையில், கடந்த 14ம் தேதி, தி.மு.க., - எம்.பி., ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.latest tamil newsஇதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, 'சாதி ஒழிப்பு, சமத்துவம், பத்திரிகையாளர் சுதந்திரம் ஆகியவற்றிற்குக் குரல் கொடுப்பதாக தி.மு.க., 'காட்டிக் கொள்கிறது. ஆனால், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ள ஆர்.எஸ்.பாரதி இப்படி பேசியது கண்டனத்திற்கு உரியது' என, தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil newsஇதனால், கட்சி மேலிடத்தின் கண்டனத்திற்கு உள்ளான ஆர்.எஸ்.பாரதி, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிப்., 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல' எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு, 'பத்திரிகையாளர்களையும், ஆதி திராவிடர்களையும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வருத்தம் தெரிவித்தால் போதாது. மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-பிப்-202012:38:28 IST Report Abuse
Lion Drsekar சுதந்திரம் அளவுக்கு மீறி சென்று விட்டது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
22-பிப்-202014:11:02 IST Report Abuse
madhavan rajan மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வரும் இவரும் இவர் கட்சியினரும் இவர்கள் ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை பிச்சை என்றுதான் கூறுவார்கள் என்றால் இவர்களுடைய தகுதி என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அதுவும் அவர் கூறியது இவர்களுடைய ஆட்சிக்கு முன்னரே இருந்த நலத்திட்டம். அதுவும் அண்ணா பெரியாருக்கு கூட அந்த பிச்சையில் பங்கில்லையாம் கருணாநிதிதான் போட்டாராம் பிச்சை. அவர் எப்படி சென்னை வந்தார் என்று பலருக்கும் தெரியும். மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தில் யாருக்கு பிச்சை போட்டார்.
Rate this:
Cancel
DMK - CHENNAI,இந்தியா
22-பிப்-202001:19:51 IST Report Abuse
DMK நான் திமுக காரன்,ஆனால் உண்மையை மறைக்க கூடாது. மு தல் முறையாக 1919 யில் நீதி கட்சி மெட்ராஸ் மாகாணத்தில், பிராமிணர் அல்லாத ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி மற்ற பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது. பெரியார் நீதி கட்சியில் சேர்ந்தது 1925 க்கு பின் தான். அம்பேத்கரும் அந்த கால கட்டத்தில் தான் அரசியலில் நுழைகிறார். நீதி கட்சி போட்ட விதையைத்தான் பின் வந்த தலைவர்கள் வளர்த்தார்கள். திமுக கட்சி ஆரம்பித்தது 1949, SC இடஒதுக்கீடு அதற்கு முன்னரே அம்பேத்கர் பெற்று தந்து விட்டார். 1950 களில் BC இட ஒதுக்கீடு கோரிக்கை வைக்க பட்டது. அதற்காக தன் சட்ட மந்திரியை பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார். திமுகவோ/ பெரியாருக்கோ இதில என்ன ரோல் இருக்கு என்று தெரிய வில்லை. பெரியார் போராட்டம் பண்ணிய தகவலும் இல்லை வெல்லம் தின்பவன் ஒருவன், விரல் சூப்புபவன் இன்னொருவன் போல் உள்ளது. இந்த RS பாரதியை ஸ்டாலின் திமுகவை விட்டு நீக்க வேண்டும்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
22-பிப்-202014:07:24 IST Report Abuse
madhavan rajanமக்களுக்காக செய்த நலத்திட்டங்களைத்தான் சொன்னேன் என்கிறார். என்ன நல்லது திட்டங்கள் என்று சொல்லவில்லை. இடஒதுக்கீடு அவர் கொண்டுவந்ததல்ல என்பது உறுதி. அப்போது பொய் சொல்லியிருக்கிறார். நலத்திட்டங்களை அவர் போட்ட பிச்சை என்று கூறுவது சரியா? அது தவறு என்று இதுவரை ஒத்துக்கொள்ளவில்லை. இவர் வீட்டில் வாங்கும் அனைத்து மானியங்களையும் (LPG போன்றவை) பிச்சை என்று சொன்னால் ஒத்துக்கொள்வாரா? ரேஷனில் இலவச அரிசியை பிச்சை போடுகிறோம் என்று கூறினால் ஒத்துக்கொள்வாரா. நலத்திட்டங்களை அப்படித்தான் சொல்லவேண்டும் தவிர பிச்சை என்று சொல்லக்கூடாது. பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டால்கூட அவன் நன்றியுடன் இருக்கவேண்டும் எதிர்பார்ப்பார் போல. இதற்கு பிச்சையே போடவேண்டாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X