வன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் திமுக எம்.பி.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் திமுக எம்.பி.,

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (133)
Share

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'டிவி சேனல்கள் மும்பை விபசார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாகப் பதவி ஏற்றது, தி.மு.க., போட்ட பிச்சையில் தான். கோவில்களில் தி.மு.க.,வினர் போடும் காணிக்கை பணத்தில்தான், பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது' என, சர்ச்சைக்குரிய வகையில், கடந்த 14ம் தேதி, தி.மு.க., - எம்.பி., ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.



latest tamil news



இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, 'சாதி ஒழிப்பு, சமத்துவம், பத்திரிகையாளர் சுதந்திரம் ஆகியவற்றிற்குக் குரல் கொடுப்பதாக தி.மு.க., 'காட்டிக் கொள்கிறது. ஆனால், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ள ஆர்.எஸ்.பாரதி இப்படி பேசியது கண்டனத்திற்கு உரியது' என, தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news



இதனால், கட்சி மேலிடத்தின் கண்டனத்திற்கு உள்ளான ஆர்.எஸ்.பாரதி, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிப்., 14ம் தேதி சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல' எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு, 'பத்திரிகையாளர்களையும், ஆதி திராவிடர்களையும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வருத்தம் தெரிவித்தால் போதாது. மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X