கோவிட்-19 வைரஸ்: 39 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன நாவல்

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 39 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான நாவலில், தற்போது உலகையே உலுக்கி கொண்டிருக்கும் 'கோவிட்-19' வைரஸ் குறித்து எழுதி இருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news


சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கோவிட் - 19 என்ற வைரஸ், அந்த நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம் உலகின் சில நாடுகளிலும் பரவியது. சீனாவில் மட்டும் கோவிட்-19 வைரஸால் 1770 பேர் பலியாகியுள்ளனர். 70 ஆயிரத்து 548 பேர், வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், கோவிட்-19 வைரஸை போல ஒரு உயிர்கொல்லி வைரஸ் பற்றி டீன் கூன்ட்ஸ் எழுதிய 'தி அய்ஸ் ஆப் டார்க்னஸ்' (The Eyes of Darkness) என்ற கற்பனையான திகில் நாவலில் கூறப்பட்டுள்ளது. 1981ல் வெளியான இந்த நாவலில், சீன ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக (பயோ வெப்பன்) பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பில் ஈடுபட்டு, 'வூஹான்-400' என்ற உயிர்கொல்லி வைரஸை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமே பாதிப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது.


latest tamil news


உண்மையில், 'கோவிட்-19' என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ், வூஹான் நகரில் தான் முதன்முதலில் பரவியது. நாவலில் அதே பெயரில் வைரஸ் உருவாக்குவதாக எழுதப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாவல் எழுதிய டீன் கூன்ட்ஸை தீர்க்கதரிசியாக சிலர் பேசினாலும், நாவலில் உள்ளது போல, பயோ வெப்பனாக சீனா உருவாக்கியதாகவும், ஆய்வகத்தில் இருந்து தவறுதலாக பரவி அந்நாட்டு மக்களையே அழித்து வருவதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-பிப்-202017:13:02 IST Report Abuse
skv srinivasankrishnaveni மேற்படி விமர்சனங்களைப் படிக்கும்போது பல அபஸ்மாரங்கள் புரியுதே ஐயா
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
19-பிப்-202003:18:30 IST Report Abuse
naadodi கற்பனைக்கு எல்லையே இல்லை.. இப்படித்தேன் சிலப்பதிகாரம் சொல்லிச்சுன்னு ஒர்த்தர் அனுப்பினாரு: "தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் வை ராசா என் செய்வாய் என் ராசா? சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும் (புகார், மதுரை, வஞ்சி), 30 காதைகளையும் (உட்பிரிவு) கொண்டது. நாலாம் அத் யாயம் மூன்றாம் பந்தின்னு ஒருத்தர் னூல் வுட்டுகிட்டு இருக்கிறாரு..சரடு விடுவதில் நம்மாளுங்கலும் சளைத்தவர்களில்லை
Rate this:
Cancel
18-பிப்-202008:32:54 IST Report Abuse
ஆப்பு அமெரிக்கா செய்த ஒரே தவறு கத்துக்குட்டி சீனர்களுக்கு தொழில்நுட்பத்தையும், விஞ்ஞான அறிவையும் குடுத்ததுதான். குரங்கு கையில் குடுத்த பூமாலை மாதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X