நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு உறுதி

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
NirbayaCase, Convicts, Hang, March3, Delhi, Court, Warrant, நிர்பயா, குற்றவாளிகள், தூக்கு தண்டனை, வாரண்ட், உத்தரவு, டில்லி, நீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டில்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

2012 ம் ஆண்டு டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.,22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், பிப்.,1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தூக்கிலிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, குற்றம் நடந்த போது தான் மைனர் என்பதால், மைனர் குற்ற சட்டப்பிரிவின் கீழ் தனது மீதான குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான்.


latest tamil news



குற்றவாளிகள் அனைவரும் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் அடுத்தடுத்து விசாரித்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சிறார் என கருதக்கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை பிற்பகலில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அனைத்து விதமான சட்ட முறையீடுகளும் முடிக்கப்பட்டது. ஆனாலும், 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு தடை கேட்டு அடுத்தடுத்து மனு தாக்கல் செய்ததால் பிப்.,1ம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 முறை தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தூக்கிடுவதற்கான வாரண்டை 3வது முறையாக டில்லி நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதில், மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-பிப்-202023:49:24 IST Report Abuse
Vena Suna நாலு பேருல ஒருத்தன் ரிக்கி பாயிண்டிங் (கிரிக்கெட் பிளேயர்) மாதிரி இருக்கான்..
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
17-பிப்-202022:43:57 IST Report Abuse
THINAKAREN KARAMANI நீதிபதி தூக்குத்தண்டனை என தீர்ப்புக் கொடுத்தவுடன் அடுத்து வரும் 15 நாளைக்குள் கருணை மனு, சீராய்வு மனு, இடைக்கால தடைமனு என்ற அனைத்து மனுக்களையும் விசாரித்து முடித்தவுடன் கொடுக்கப்படும் அந்தத் தண்டனையை உடனேயே நிறைவேற்ற வேண்டும் என்ற சட்டம் இப்பொழுதே கொண்டு வரவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
17-பிப்-202022:43:14 IST Report Abuse
raghavan கருணை மனு ஒருத்தனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு சரியா 10 நாட்கள் கழிச்சு போடுவான்..மறுபடியும் சீராய்வு மனு அப்படி இப்படின்னு 20 நாளை தள்ள பார்ப்பானுங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X