கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

மைசூரு: இயற்கை வளம் நிறைந்துள்ளதால், 'கடவுளின் தேசம்' என்றழைக்கப்படும் கேரளா, பல வகைகளில், தனது அண்டை மாநிலங்களில் அத்துமீறி வருகிறது. குறிப்பாக, மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை, வாகனங்களில் ஏற்றி, இரவோடு இரவாகத் தமிழகத்தில் கொட்டிச் சென்றது.latest tamil news


இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த, தேசியப் பசுமைத் தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழு தலைவர் ஜோதிமணியிடம், 'கழிவுகளை கேரளாவிலிருந்து இங்கு கொண்டுவந்து கொட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தினர்.ஆய்வு செய்த ஜோதிமணி, 'கூடலுார் வனப்பகுதிகளில் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார். இதையடுத்து, தமிழக - கேரள எல்லை பகுதிகளில் உள்ள செக்போஸ்ட்களில், அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்திற்குள் கழிவுகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரு சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் கழிவுகளை கொட்டத் துவங்கியுள்ளது கேரளா.


latest tamil news


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:மைசூர், நஞ்சன்கூடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. குறிப்பாக, பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இங்கு அமைந்துள்ளன.இங்கு, காலாவதி மாத்திரை, சிரிஞ்ச், நாப்கின், ரத்தக்கறை படிந்த பஞ்சு உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி, கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொட்டிச் செல்கின்றனர்.


latest tamil news


தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டிவந்த இவர்கள், அங்கு கெடுபிடி அதிகரித்ததால், பந்திப்பூர் வழியாக கர்நாடகாவுக்குள் நுழைகின்றனர். இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுவதால் வனவிலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் மட்டுமின்றி, மனிதர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-பிப்-202011:57:28 IST Report Abuse
Bhaskaran காசை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் இருக்கும் வரை இதுதொடர்கதைதான்
Rate this:
Cancel
Raju - Chidambaram,இந்தியா
18-பிப்-202006:09:57 IST Report Abuse
Raju மலையாளிகள் எப்போதும் சுயநலவாதி
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
18-பிப்-202005:02:33 IST Report Abuse
Nepolian S எடப்பாடி அரசு என்ன செய்கிறது
Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
18-பிப்-202010:45:00 IST Report Abuse
Varun Ramesh"தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது ........" என்று எழுதப்பட்ட அறிக்கையில் கையொப்பமிடும் பணியில் இருக்கிறார். விரைவில் அறிக்கை பத்திரிகைகளில் முழுப்பக்கத்தில் வெளிவரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X