கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உங்கள் இஷ்டப்படி செயல்பட வேண்டுமா: முருகதாசுக்கு ஐகோர்ட் கேள்வி

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
ARMurugadoss, HighCourt, Chennai, Darbar, Case, ஏஆர் முருகதாஸ், ஐகோர்ட், தர்பார், விநியோகஸ்தர், வழக்கு, சென்னை, கண்டனம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகவும், பாதுகாப்பு வேண்டும் எனவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தர்பார். இப்படம் நஷ்டத்தை கொடுத்திருப்பதாக சில விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் முருகதாஸின் வீடுகளை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டஈடு கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும். தனக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸிற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் பதிலளித்தது. இந்நிலையில் தான் தாக்கல் செய்த புகார் மனுவை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.


latest tamil news


மிரட்டல் விடுக்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'நீங்கள் வேண்டும் எனில் விசாரிக்கவும், வேண்டாம் எனில் விசாரிக்க கூடாது எனவும் சொல்கிறீர்கள். நீதிமன்றம், உங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டுமா?' என கண்டித்து, வழக்கை முடித்து வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
18-பிப்-202013:28:36 IST Report Abuse
narayanan iyer டாஸ்மாக் கடைகளுக்கு உற்பத்தியை கொடுக்கும் ஆலைகளை மூட உத்தரவிட்டால் போதுமே . அதை ஏன் நீதிமன்றம் செய்யக்கூடாது?
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
19-பிப்-202017:03:40 IST Report Abuse
s.rajagopalanசோற்றுக்கு அது ஒன்றுதான் இப்போ வழி ...அதையும் அடைக்க சொல்கிறீர்களே " கருணாநிதி தமிழனுக்கு அளித்த மாபெரும் பரிசு அது ..யாரும் விட மாட்டார்கள் விட முடியாது....அதற்கான திராணி கிடையாது ......
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
18-பிப்-202010:40:44 IST Report Abuse
konanki நோர்த் ஆற்காட் பகுதிக்கு இந்த படத்தை விநியோகம் செய்ய அதிக பணம் குடுத்துவிநியோக உரிமையியே வாங்கிய விநியோகஸ்தரின் பேட்டி யூ tube channelel பார்க்கவும். அதில் அவரே சொல்வது 1 அந்த விநியோகஸ்தர் படத்தை அவரே பார்க்கவில்லை.2 முருக டோஸ் நன்றாக படம் வந்திருக்கிறது என்று 'வாய் மொழி உத்தரவாதம் ' தந்ததால் வாங்கினராம் . 3 கோடிகளில் முதலீடு செய்பவர் எந்த வித முன் யோசனைமியின்றி ரிஸ்க் அனாலிசிஸ் செய்யாமல் பனத்தை முதலீடு செய்வாராம் . 4 இந்த ஆட்களை விநியோகம் செய்து தான் ஆக வேண்டும் என்று யாராவது வற்புறுத்தார்களா ? 5 சினிமா விநியோகம் வர்த்தகமா அல்லது சூதாட்டம்? 6 குப்பை படத்தை கொடிகள் செலவு செய்து யார் எடுக்க சொன்னார்கள் 6 டப்பா படத்தை யார் கொடிகள் கொடுத்து விநியோகம் செய்ய சொன்னார்கள் 7 நீங்க செய்யர் முட்டாத்தனமான வர்த்தக /சூதாட்ட முடிவுகளுக்கு போலீஸ் கோர்ட் நேரத்தை ஏன் வீணாக்குகிரஎ கள் ? 8 கோர்ட் நேரம் போலீஸ் நேரம் நம்முதுய்யா வரி பணம் . அதனால் குறைந்த பட்சம் இந்த பார்ட்டிகள் மீது அபராத தொகை கோர்ட் விதிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-பிப்-202006:33:02 IST Report Abuse
Natarajan Ramanathan பொதுவாகவே கூத்தாடிகள் எந்த சிறு பிரச்சினை என்றாலும் கமிஷனர் ஆபீசில் புகார் அளிப்பதும் அதை உடனே ஊடகங்கள் நாள்முழுதும் காண்பித்து ஒப்பாரி வைப்பதும் நடக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X