அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு

Updated : பிப் 17, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
குடியுரிமை சட்டம், தீர்மானம் , அரசு மறுப்பு,தடியடி, போராட்டங்கள் ,எதிர்க்கட்சிகள் , வாபஸ்

சென்னை :குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், போலீஸ் தடியடி தொடர்பாக, முதல்வர் அளித்த விளக்கம், திருப்தி அளிக்கவில்லை என்று கூறியும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நேற்று வெளிநடப்பு செய்தன.சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நடந்த விவாதம்:


எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, மற்ற மாநிலங்களை போல், தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை, வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். இதற்கு, உத்தரவிட்டது யார் என்பதை தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை, விடுதலை செய்ததை வரவேற்கிறோம். அதேபோல, அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும், வாபஸ் பெற வேண்டும்.
மக்களின் மன உணர்வுகளுக்கு, மதிப்பளிக்க வேண்டும். சட்டசபையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம்; 19ம் தேதி, ஜனாதிபதியிடம் அளிக்க உள்ளோம்.குடியுரிமை திருத்த சட்டத்தை, பார்லிமென்டில் ஆதரித்ததற்கு பிராயசித்தமாக, 'தேசிய மக்கள் பதிவேடு திட்டம், தமிழகத்தில் செயல்படுத்தப்படாது' என, அரசு அறிவிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை வரவேற்கிறோம். ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்க்கிறோம். இது தொடர்பாகவும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


சபாநாயகர் தனபால்: ஏற்கனவே, நீங்கள் கொடுத்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் தீர்மானம் கொடுக்க இயலாது.


தி.மு.க., - ஆஸ்டின்: சட்டசபை விதியில், அவ்வாறு இல்லை.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: விவாதம் நடத்தி, நிராகரிக்கப்பட்ட பொருளை தான், மீண்டும் வலியுறுத்த முடியாது; இது குறித்து விவாதம் நடத்தப்படவில்லை.


சபாநாயகர்: தீர்மானத்தை எடுப்பதா, நிராகரிப்பதா என முடிவெடுக்க, சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில், நீங்கள் கொடுத்த தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்து விட்டேன். இது குறித்து, விவாதிக்க வேண்டாம்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இதற்கு, அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற, ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்; உடனடியாக, தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். அரசுக்கு, நல்ல பெயர் கிடைக்கும்.


முஸ்லிம் லீக் - முகமது அபூபக்கர்: எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பெரும்பான்மை ஆள வேண்டும்; சிறுபான்மை வாழ வேண்டும். எங்களுக்கு எதிரான, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுங்கள். இந்த சட்டம், இந்தியஇறையாண்மைக்கு எதிரானது.


மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: குடியுரிமை திருத்த சட்டம், சமூக நீதிக்கு எதிரானது. அதை திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.

ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே கொடுத்த தீர்மானத்தை நிராகரித்து விட்டதாக, சபாநாயகர் அறிவித்தார்.
இதை கண்டித்தும், வண்ணாரப்பேட்டை போலீஸ் தடியடி தொடர்பாக, முதல்வர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறியும், எதிர்க்கட்சி எம்.எல். ஏ.,க்கள் அனைவரும், வெளிநடப்பு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் தென்றல் - சென்னை,இந்தியா
18-பிப்-202022:21:29 IST Report Abuse
தமிழ் தென்றல் கொள்ளையடிக்காம 8 வருசமா இருந்த வெறி சுடலை கூட்டம் இதுவும் செய்யும் இதுகுமேலையும் செய்யும்
Rate this:
Share this comment
Cancel
18-பிப்-202021:23:18 IST Report Abuse
R. SUBRAMANIAN உன்மையிலேயே திமுக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தால் ஏன் அக்கட்சியின் நாடாளுமன்ற உறூப்பினர்கள் ஒட்டுமொத்த மாக தங்கள் பதவியை இராஜினாமா செய்யக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-பிப்-202020:22:54 IST Report Abuse
RajanRajan CAA எதிர்த்து தீர்மானமா நிறைவேற்ற வேண்டும் என்று போராடும் சுடலை அன்று இந்த மசோதாவை எதிரித்து ஏன் இவிங்க MP க்கள் லோக்சபாவில் ஒட்டு போட வில்லை. சிந்தியுங்கள் மக்களே யார் தேசத்துரோகிகள் மக்களை திசை திருப்பி நாட்டை அதால பாதாளத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறாங்கன்னு. மக்கள் இந்த கேள்வியை சுடலை & கோ விடம் விளக்கம் கேட்க வேண்டுமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X