பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் நுழைய பிரிட்டன் எம்.பி.,க்கு தடை

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 17, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
British MP Debbie Abrahams, பிரிட்டன், எம்.பி., இந்தியா, நுழைய, மறுப்பு

டில்லி: மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த பிரிட்டன் எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், துபாயில் இருந்து நேற்று இந்தியாவுக்கு வந்தார். எனினும், விமான நிலையத்தில், அவரிடம் முறையான, 'விசா' இல்லை எனக் கூறிய அதிகாரிகள், அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர்.


latest tamil news



மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை குழு தலைவராக இருக்கும் அவர், மத்திய பா.ஜ., அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை துபாயில் இருந்து, டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆப்ரகாம்சை அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரின், 'இ-விசா' ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அவர் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து, ஆப்ரகாம்ஸ் கூறியதாவது:
டில்லி விமான நிலையத்தில், குடிவரவு அதிகாரிகளிடம், இ-விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அதை சரிபார்த்த அதிகாரி, இ-விசா, ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறினார். ஆனால், அது, அக்டோபர் வரை செல்லுபடியாகும். அதை ஏற்க மறுத்த அவர்கள், என்னை துபாய்க்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-பிப்-202004:50:21 IST Report Abuse
 nicolethomson இந்தியா மட்டும் என்ன செய்வது நாங்களும் செய்வோம் என்று பாகிஸ்தானும் இந்த அம்மா வந்தா ரிஜெக்ட் பண்ணனும் அப்போதான் இந்த கட்சி அழகாக இருக்கும்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-பிப்-202014:45:22 IST Report Abuse
Darmavan மலேசியாவிற்கு பாமாயில் தடை.இந்த பாக் ஏஜெண்டுக்கு விசா தடை இப்படி உடனுக்குடன் செயல்பாடு இந்திய எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.பாராட்டவேண்டியதே
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
18-பிப்-202012:21:38 IST Report Abuse
sridhar ரமேஷ் ராபர்ட் ..அவங்க எண்ணெயை சும்மா குடுத்தா நீ சொல்ற நியாயம் சரி. ஹோட்டலில் பணம் குடுத்து நீ மாட்டுக்கறி சாபிடறியே , தினமும் அவனுக்கு நன்றி சொல்றியா ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X