இந்தியாவை கவனியுங்கள்: இம்ரான் கதறல்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: ''இந்தியாவின் சில கொள்கை முடிவுகளை, சர்வதேச சமூகம் கவனிக்க தவறினால், அகதிகள் பிரச்னையை, பாகிஸ்தான் மீண்டும் சந்திக்க நேரிடும்,'' என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.



latest tamil news



தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் வசிக்க, அனுமதி அளிக்கப்பட்டதை குறிக்கும் வகையில், இரண்டு நாள் அகதிகள் மாநாட்டுக்கு, பாக்., அரசு ஏற்பாடு செய்திருந்தது.இதில், ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:'பாகிஸ்தானை அழித்து ஒழிக்க, இந்திய ராணுவத்துக்கு, 11 நாட்கள் போதும்' என, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசினார்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட, அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டின் பிரதமர், இப்படி பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது.ஹிந்துத்வா கொள்கையால், ஜம்மு - காஷ்மீர் மக்களின் வாழ்க்கை, 200 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது.இதே கொள்கையால், இந்தியாவில் வசிக்கும், 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான, பாரபட்சமான இரண்டு சட்டங்களை, பா.ஜ., அரசு வகுத்துள்ளது.


latest tamil news



இந்தியாவின் இது போன்ற கொள்கை முடிவுகளை, சர்வதேச சமூகங்கள் கவனிக்க தவறினால், அங்கு வசிக்கும் முஸ்லிம்கள், பாகிஸ்தானை நோக்கி நகரத் துவங்குவர். இது, பாக்.,கில் மீண்டும் அகதிகள் பிரச்னையை உருவாக்கும். தற்போது இருப்பது, நேரு அல்லது மஹாத்மா காந்தியின் இந்தியா கிடையாது.எனவே, ஐ.நா., இந்த பிரச்னையில் உடனடியாக தலையிடுவது அவசியம். இல்லையெனில், எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.பயங்கரவாதிகளின் புகலிடமாக, பாக்., இனியும் இருக்காது. அவர்களுக்கு இங்கு இடமில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan - Kanyakumari,இந்தியா
20-பிப்-202014:56:35 IST Report Abuse
Balakrishnan ///எனவே, ஐ.நா., இந்த பிரச்னையில் உடனடியாக தலையிடுவது அவசியம். இல்லையெனில், எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.பயங்கரவாதிகளின் புகலிடமாக, பாக்., இனியும் இருக்காது. அவர்களுக்கு இங்கு இடமில்லை. இவ்வாறு, அவர் பேசினார்/// சரிதான் எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை ஆக.
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
19-பிப்-202018:01:29 IST Report Abuse
Jaya Ram உண்மையினை ஒத்துக்கொண்ட இம்ரானுக்கு நன்றி ஏனென்றால் அந்த காந்தியும் , நேருவும் இளித்தவாயர்கள் தான் அதனால் தான் நீங்கள் ஆட்டம் போட்டீர்கள் இருப்பினும் ஒரு கேள்வி இந்தியாவில் பிரிவினையின்போது 3.5, கோடி இஸ்லாமியரும் , பாகிஸ்தானில் 3.5, கோடி ஹிந்துக்களும் வாழ்ந்த இடத்தினை பிரிய மனமில்லாமல் தங்கினார் ஆனால் உன்னோட கூற்றுப்படி இப்போ இந்தியாவில் 20.கோடி இஸ்லாமியர் உள்ளனர் என்கிறீகள் ஆனால் பாகிஸ்தானில் தற்போது எவ்வளுவு ஹிந்துக்கள் உள்ளனர் என்ற கணக்கினை அவரிடம் கூறீனீரா என்ன வஞ்சகத்தனம் மோசடியில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை வெட்கம் , வெட்கம்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-பிப்-202023:18:02 IST Report Abuse
madhavan rajan நேரு மகாத்மா காந்தி இருந்தபோதுதான் ஜின்னா இங்கு முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை என்று தனி நாடு கேட்டு வாங்கினார். முஸ்லீம்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கவேண்டியது முலீம் நாடான பாகிஸ்தானின் கடமையல்லவா? உங்கள் ஆட்களை நீங்களே கைவிட்டால் எப்படி? ஏதாவது உதவி வேண்டுமென்றால் ஆப்கான், பங்களாதேஷிடம் வாங்கிக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X