ஜம்மு - காஷ்மீருக்கு தனிப்படைப் பிரிவு: பிபின் ராவத் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீருக்கு தனிப்படைப் பிரிவு: பிபின் ராவத்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (1)
Share

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீருக்கென, ராணுவத்தில் தனியாக ஒரு படைப் பிரிவு உருவாக்கப்படும்,'' என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.



latest tamil news



டில்லியில் நேற்று, பிபின் ராவத் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் பிராந்தியத்தின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்தும் வகையில், அந்த பிராந்தியத்துக்கென, ராணுவத்தில் தனி படைப் பிரிவு அமைக்கப்படும். விமானப் படைக்கான தனிப் பிரிவு, அடுத்தாண்டு துவக்கத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், நீண்ட துார ஏவுகணை மற்றும் விமானப் படையின் சொத்துக்கள் அனைத்தும், இந்த படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் வரும்.


latest tamil news



இந்திய கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு படைப் பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, தீபகற்ப படைப் பிரிவு உருவாக்கப்படும். போக்குவரத்து மற்றும் பயிற்சி போன்றவற்றுக்கு, தனிப் பிரிவுகள் உருவாக்கப்படும். விமானப் படைக்கு, 114 போர் விமானங்கள் வாங்குவதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு விமானம் தாங்கி, நீர்மூழ்கி கப்பல் வாங்குவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X