நீதிபதிகள் பெயரை பரிந்துரைக்க தாமதம்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
SC,SupremeCourt,Judges,HC_judges,collegium,சுப்ரீம்கோர்ட்,நீதிபதிகள்

புதுடில்லி: 'உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 396 பணியிடங்களில், 199 பதவிக்கு இதுவரை பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கை, நீதிபதிகள், எஸ்.கே. கவுல், கே.எம். ஜோசப் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடந்த விவாதத்தின்போது, அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால் கூறியதாவது :நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான முடிவு எடுக்க, 'கொலீஜியம்' எனப்படும் நீதிபதிகள் குழு, 119 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அதே நேரத்தில், பின்னணியை விசாரிப்பது உள்ளிட்டவற்றுக்கு, மத்திய அரசு, 127 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.


latest tamil newsநாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள, 396 பணியிடங்களில், 199 பதவிகளுக்கு, உயர் நீதிமன்றங்கள் இதுவரை, பெயரை பரிந்துரைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து, காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட விபரங்களை அளிக்கும்படி, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும், அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
18-பிப்-202008:55:09 IST Report Abuse
Krishna ABOLISHING who are Dead Slow, Ruler-Official-Media Biased, Poor Quality, V.Costly, Non-Simple Procedured, Never Punishing False Complainants, Never Encouraging Litigants to fight themselves. NEW COURTS from Non-Advocates with good Post-ion Training in Law (with Only Minm Wages as they Encourage Contract Labour).
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-பிப்-202008:21:03 IST Report Abuse
ஆரூர் ரங் தீர்ப்புக்களின் தரமும் அவற்றை நிறைவேற்றுவதில் உள்ள சுணக்கமும் பல வேண்டாத வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டுவரவே ஊக்கமளிக்கின்றன .வழக்குகள் விசாரணைக்கே ஏற்றவையல்ல. கோர்ட்டின் நேரம்தான் வீண் .சட்டக்கல்லூரிகளின் தரம் இன்னும் மோசம் .கொலிஜியம் முறை திறமைவாய்ந்த பலரை நீதித்துறைக்கு வரத்தய்ங்க வைக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X