பொது செய்தி

இந்தியா

கிராம பொருளாதாரம்: ஜனாதிபதி பெருமிதம்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
RamNathKovind,President,Rural_Economy,ஜனாதிபதி,ராம்நாத்கோவிந்த்

டாமன்: ''கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூவில், பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: டாமன் - டையூ மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி ஆகியவற்றை ஒரே யூனியன் பிரதேசமாக இணைத்து, மத்திய அரசு பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றியுள்ளது.


latest tamil news



வளர்ச்சி திட்டங்கள் முழு வீச்சில் நடக்கவும், நிர்வாகம் விரைவாக நடக்கவும், இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். நாடு முழுவதும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயத் துறையில், 25 கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்து உள்ளது. விவசாயிகள் மானிய விலையில் விதைகள் வாங்கவும், கருவிகள் வாங்கவும் பல அறிவிப்பு கள் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
18-பிப்-202010:30:59 IST Report Abuse
Raja Narasiman Vivek எல்லாம் காங்கிரஸ் பெருமைக்கு ஒரு அடையாளம் என்று குரல் உயர்த்தி சொல்லுங்கள் முதல் குடிமகனே
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-பிப்-202008:17:28 IST Report Abuse
சீனி குறைவான நீரில் நவீன முறையில் உணவுப்பொருள் உற்பத்தியை பெருக்கவேண்டும். மக்கள் மூன்று வேளையும் அரிசி உணவு சாப்பிடுவதை குறைத்துக்கொண்டு, குறைவான நீரில் விளையும், கம்பு, ராகி, சோளம் ஒருவேளை சேர்த்துக்கொண்டால் நீரின் தேவை குறையும், ஆரோக்கியமும் பெருகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X