'கொரோனா' வைரஸ் கொடூரம்: 1,868 பேர் பலி

Added : பிப் 18, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
China,coronavirus,covid19,death_toll,கோவிட்19,சீனா,பலி,கொரோனா,வைரஸ்

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் துவங்கிய, கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. நாட்டின், 34 மாகாணங்களில், 31 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 18 முக்கிய நகரங்கள் உள்ள ஹூபய் மாகாணத்தில், மிக அதிகமாக பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு முதலில் தென்பட்ட வூஹான் நகரில், பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று(பிப்.,17) ஒரே நாளில், 98 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



புதிதாக, 1,888 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
18-பிப்-202015:20:52 IST Report Abuse
dandy டாஸ்மாக் நாட்டில் சாராயம் குடித்து ஈரல் அழுகி இறப்பவர்கள் இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
18-பிப்-202015:09:52 IST Report Abuse
Viswam எதோ 2 % தான் இறப்பு என்று சர்வ சாதாரணமாக சொல்லுகிறார்கள். நூறு கோடிக்குமேல் உள்ள ஜனத்தொகையை நினைத்தால் பகீரென்று இருக்கிறது. நிஜமாகவே பையாலாஜிக்கல் போருக்குண்டான வைரஸ் உஹானில் தவறுதலாக வெளியே விடப்பட்டதா அல்லது கண்டதை தின்னுவதால் வந்த வினையா ? அறிவியல் என்ன சொல்லுகிறதென்றால் நாம் சாப்பிடும் உணவு DNA வை காலப்போக்கில் மாற்றும் திறனுள்ளது. இது பிறகு ஜீன் லெவெலுக்கு போகும். நகர்வன, ஊர்வன, பரப்பன என்று வித்தியாசம் இல்லாமல் தின்னும் சீனர்களின் ஜெனெடிக் அமைப்பு இந்த மாதிரி வியாதிகளை எதிர்க்க முடியாமல் போகிறதோ என்னவோ வெயில் காலம் வந்தால் இந்த வைரஸ் பரவாது என்கிற தியரி உண்மையானால், சீக்கிரம் கத்திரி வெயில் வந்தால் தேவலை. சீனர்களும் கொஞ்சமாவது வினோத உணவு வகையை விட்டுவிட்டு நேரான பாதைக்கு திரும்பினால் நல்லது. இல்லாவிட்டால் அடுத்த சீசனுக்கு புதியதாக இன்னொரு வைரஸ் படம் வெளியிடுவார்கள் .
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
18-பிப்-202014:12:15 IST Report Abuse
Manikandan Sivalingam கடவுள் ஆக மாறி இந்த பிரபஞ்ச தத்துவத்தை அழிக்க நினைக்கும் மனித குல மக்களுக்கு......இயற்க்கை எனும் பஞ்சபூதம்.....கொடுக்கும் அன்பு பரிசு.......ஏற்றுகொண்டு தான்....ஆக வேண்டும்......வேறு வழியில்லை......கர்மமே கடவுள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X