பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு: ரயில் விபத்துகள் குறைந்தன

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கரூர் : ரயில்வே துறையில் மேற்கொள்ளப்படும், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடந்த, ஐந்து ஆண்டுகளில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



latest tamil news


பாதுகாப்பு, பஸ்களை விட குறைந்த கட்டணம் மற்றும் பல்வேறு வசதிகள் காரணமாக ரயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நாடு முழுவதும் தினமும், 2.50 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.கடந்த, ஐந்து ஆண்டுகளில், 60 சதவீதத்துக்கு அதிகமான ஆளில்லாத ரயில்வே கேட்கள், ஆள் உள்ள ரயில்வே கேட்களாக மாற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 80 சதவீதம் வரை முடிந்துள்ளது. மேலும், ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதை தடுக்க, ரயிலில், ஆன்டிகொலிஜியம் டிசைவர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளதாக தெரிந்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய ரயில்வேயில், 1961ல் மட்டும், 2,131 விபத்துக்கள் நடந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, விபத்துகள் குறையத் துவங்கின. கடந்த, 60 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு, 500 முதல், 600 விபத்துகள் என, மொத்தம், 42 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த, 2018ல், 79 விபத்துகள் நடந்தன. அதில், 97 பேர் உயிரிழந்தனர். 182 பேருக்கு காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு கோடியே, 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.கடந்த, 2019ல் 59 விபத்துகள் நடந்தன. அதில், 18 பேர் உயிரிழந்தனர். நான்கு கோடியே, 96 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. நடப்பு (2019-20) நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம், 31 வரை, 50 விபத்துகளில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடியே, 82 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஒரே தண்டவாளத்தில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரயில்கள் நேருக்கு நேர் வருகிறதா என, ரேடார் வசதி தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர, நவீன ரக ரயில் பெட்டிகள் விடப்பட்டுள்ளன. இந்த காரணங்களால் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-பிப்-202002:38:36 IST Report Abuse
Rajagopal ரயிலுக்குள்ளேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளும் வசதி வந்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-பிப்-202012:32:21 IST Report Abuse
நக்கீரன் சபாஷ். பாராட்டுக்கள். மோடிஜி ஆட்சிக்கு வந்த பின் ஏராளமான திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்து வேகப்படுத்தப்படுகின்றன. நிச்சயம் அனைத்து அரசு துறைகளும் இப்போதுதான் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தவர்கள் இன்றைக்கு வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. ஆனால், தென்மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் லஞ்ச ஊழலில் ஊறி திளைக்கும் திருட்டு கூட்டத்தின் ஆட்சியை தாங்கிப்பிடித்து மனதை உறுத்துகிறது. மேலும், சில இடங்களில் இயற்க்கைக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காப்பர் இல்லாமல் மனிதன் வாழலாம். ஆனால், தூய காற்று இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல் கெஜ்ரிவாலும் மோடிஜியும் ஒரே நேர்கோட்டில் வர ஆரம்பித்திருக்கிறார்கள். நல்லவர்கள் ஒன்றிணைவது மகிழ்ச்சி.
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அருமை விபத்து குறைந்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X