வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், காஷ்மீரில் சட்டசபை தொகுதிகள் வரையறை செய்யும் பணியை மத்திய அரசு துவக்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, புதிய சட்டசபை தொகுதிகள் எல்லை வரையறை மற்றும் பார்லிமென்ட் தொகுதிகளின் மறுசீரமைப்பு பணி துவங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை செயலாளர், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதம்: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் படி, தொகுதி மறுவரையறை செய்யும் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமையும். இதில், தலைமை தேர்தல் ஆணையர் அல்லது அவர் நியமிக்கும் உறுப்பினர், மாநில தேர்தல் கமிஷனர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்த குழுவில் தலைமை தேர்தல் ஆணையர் இடம்பெற வேண்டும். அல்லது மற்ற தேர்தல் ஆணையர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுவில், தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவை நியமிக்க, சுனில் அரோரா முடிவு செய்துள்ளார். இது குறித்து சட்டத்துறை செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொகுதி மறுவரையரை செய்யும் பணி 4 மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யும் பணி நடக்க உள்ளது. இதற்கு பின்னர் சட்டசபை தேர்தல் நடக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE