அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சியில் தான் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டனர்: அமைச்சர் ஜெயகுமார்

Added : பிப் 18, 2020 | கருத்துகள் (76)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டதை மறக்க முடியாது' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.



latest tamil news



சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், இன்று (பிப்., 18), செய்தியாளர்களைச் சந்தித்த, அமைச்சர் ஜெயகுமாரிடம், சி.ஏ.ஏ.,வை எதிர்த்து முஸ்லிம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்துப் பேசியதாவது:தமிழகத்தில் அனைத்து மத மக்களும், மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய இன்னல் கூட நேராத வகையில், முழுமையான பாதுகாப்பை அ.தி.மு.க., அரசு வழங்கி வருகிறது.


latest tamil news



கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தபோது, பலர் உயிர் இழந்தனர். தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டனர் என்பதை யாரும் மறக்க முடியாது.சி.ஏ.ஏ.,வால் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சென்னையில் நடந்த சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தி.மு.க., மீது, அ.தி.மு.க., அமைச்சர் குற்றம்சுமத்தி இருப்பது, பிரச்னையை திசை திரும்பும் முயற்சி' என, தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலைகாண் - சென்னை,இந்தியா
18-பிப்-202022:04:08 IST Report Abuse
சுடலைகாண் திமுக இந்துக்களை அவமதித்து அழித்தது. அதிமுக இசுலாமியர்களுக்கு சலுகை கட்டி அவர்களை தாஜா செய்கிறது. ரெண்டுமே ஒரேய குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர்களால் இந்துக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் , வஞ்சிக்கப்படுகின்றனர்
Rate this:
Cancel
Mango Mani - Bangalore,இந்தியா
18-பிப்-202021:03:34 IST Report Abuse
Mango Mani அண்ணன் போட்டோவை பார்த்தாலே 'தம்பி பாப்பா ' தான் ஞாபகத்துக்கு வரான்..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-பிப்-202016:32:07 IST Report Abuse
Endrum Indian முஸ்லிம்களா அவமதிக்கப்பட்டனர்? இந்துக்கள் தான் அவமதிக்கப்பட்டனர் இந்த திராவிட என்று சொல்லப்படும் திருட்டு ...ள் கட்சிகளினால்??இன்று வரை அது தொடர்கின்றது.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
18-பிப்-202019:32:01 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பாபர் மசூதி இடித்ததை சொல்லுகிறீரா என்ன...
Rate this:
வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா
18-பிப்-202020:00:10 IST Report Abuse
வாரணம் ஆயிரம்வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா//// இல்லை இல்லை ராமர் கோவிலை இடித்த வந்தேறி அயோக்கிய முஸ்லீம் பாபர் பற்றி சொல்கிறார்...
Rate this:
Dhana - Chennai,இந்தியா
18-பிப்-202020:45:37 IST Report Abuse
Dhanaபாபருக்கு சமாதி மசூதி இந்தியாலேர்ந்து காபூலுக்கு ஹுமாயுன்/அக்பார்காலத்துலே தூக்கிட்டு போய்ட்டாங்க ..... இங்க எது பாபர் மசூதி... ஹுமாயுன் நாமா bookla வரலாற்று பதிவு இருக்கு.... இங்க இல்லாத பாபர் மசூதிக்கு ஏன் இவ்வளவு போராட்டம் ... வன்முறை... ஒரு கோயில்ல இருந்து மூலவர் சாமி சிலையை எடுத்துட்டு போய்ட்டா அப்புறம் அந்த கோயிலுக்கு பேரு பாழடைந்த கோயில்.....அங்க வேற எதை வச்சா என்ன பிரச்னை ? பாபர் மசூதி இல்ல பிரச்சனை , அந்த 5 ஏக்கர் நிலம் .....அட போங்கடா........
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
18-பிப்-202020:54:41 IST Report Abuse
Ramesh Mதம்பி வெற்றிக்கொடி கட்டு, அன்று கோவை குண்டு வெடிப்பு சமயத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பல அப்பாவி முஸ்லிம்களும் கலவரத்தில் பாதிப்படைந்தனர் (குண்டு வைத்த முஸ்லீம் தவிர மற்ற முஸ்லீம்). அப்போது திரு ரஜினிகாந்த் தான் முதலில் பாதிக்கப்படும் அந்த அப்பாவி முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார். இது அரசியல் பிரச்னை. இதனால் அப்பாவி மக்களை தண்டிக்காதீர்கள் என்று. அப்போது DMK காங்கிரஸ் யாரும் முதலில் பேசவில்லை. பாபர் மசூதி இடித்ததை கூட தன் வள்ளி படத்தில் இதை கொண்டாடிய 4 இந்துக்களை பார்த்து மனிதர்களை மதியுங்கள் என்று கூறியிருப்பார்.துக்லக் பத்திரிக்கையும் மசூதி இடிப்பை கடுமையாக கண்டித்தது. 1971 ல் இந்து தெய்வத்தை அவமானம் செய்ததையும் நடுநிலையாக கண்டித்தது. ஆனால் DMK பாபர் மசூதி இடிப்பிற்கு மட்டும் தவறு என்று கூறி இந்து தெய்வத்தை அவமானப்படுத்தியதை தவறு என்று இதுவரை கூறவில்லை. DMK நடுநிலையாக செயல் போடுகிறார்களா அல்லது ஒட்டு என்னும் தங்க சங்கிலிபோட்ட குழந்தையாக உங்களை பார்க்கிறார்களா என்பது யோசியுங்கள். இல்லை DMK வில் உறுப்பினராக உள்ள முஸ்லீம் கள் எதனை சதவீதம் பேர் MLA SEAT MP SEAT கொடுத்திருக்கிறார்கள். அதிகபட்சம் சிறுபான்மைய துறைக்கு மந்திரி மட்டும் தான் கொடுப்பார்கள். அதுவும் கூட்டணி வைத்துள்ள முஸ்லீம் கட்சிக்கு. DMK வில் உள்ள முஸ்லிம்களுக்கு சலுகை குறைவு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X