தி.மு.க., ஆட்சியில் தான் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டனர்: அமைச்சர் ஜெயகுமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சியில் தான் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டனர்: அமைச்சர் ஜெயகுமார்

Added : பிப் 18, 2020 | கருத்துகள் (76)
Share

இந்த செய்தியை கேட்க

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டதை மறக்க முடியாது' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.



latest tamil news



சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், இன்று (பிப்., 18), செய்தியாளர்களைச் சந்தித்த, அமைச்சர் ஜெயகுமாரிடம், சி.ஏ.ஏ.,வை எதிர்த்து முஸ்லிம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்துப் பேசியதாவது:தமிழகத்தில் அனைத்து மத மக்களும், மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய இன்னல் கூட நேராத வகையில், முழுமையான பாதுகாப்பை அ.தி.மு.க., அரசு வழங்கி வருகிறது.


latest tamil news



கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தபோது, பலர் உயிர் இழந்தனர். தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டனர் என்பதை யாரும் மறக்க முடியாது.சி.ஏ.ஏ.,வால் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சென்னையில் நடந்த சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தி.மு.க., மீது, அ.தி.மு.க., அமைச்சர் குற்றம்சுமத்தி இருப்பது, பிரச்னையை திசை திரும்பும் முயற்சி' என, தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X