மண்ணை 'பொன்னாக்கிய' அதிகாரி...

Added : பிப் 18, 2020
Advertisement
''அடிக்கிற வெயில்ல, மூளையே உருகிடும் போல இருக்குது. ஆனா, இங்க பார்த்தால், எப்ப பாரு மரம் வெட்டிட்டே இருக்காங்க. எந்த அதிகாரியும் கண்டுக்கறதில்லை,'' என, மொபைல் போனில் கோபமாக பேசியவாறே சித்ரா, மித்ரா வீட்டுக்குள் வந்தாள்.''என்னக்கா ரொம்ப சூடா இருக்கீங்க?'' மித்ரா கேட்டதும், ''பின்ன என்னடி, ஒரு சிலர் கஷ்டப்பட்டு மரம் வளர்க்கிறாங்க? மறுபக்கம், மரம் வெட்டறாங்க. இந்த
 மண்ணை 'பொன்னாக்கிய' அதிகாரி...

''அடிக்கிற வெயில்ல, மூளையே உருகிடும் போல இருக்குது. ஆனா, இங்க பார்த்தால், எப்ப பாரு மரம் வெட்டிட்டே இருக்காங்க. எந்த அதிகாரியும் கண்டுக்கறதில்லை,'' என, மொபைல் போனில் கோபமாக பேசியவாறே சித்ரா, மித்ரா வீட்டுக்குள் வந்தாள்.

''என்னக்கா ரொம்ப சூடா இருக்கீங்க?'' மித்ரா கேட்டதும், ''பின்ன என்னடி, ஒரு சிலர் கஷ்டப்பட்டு மரம் வளர்க்கிறாங்க? மறுபக்கம், மரம் வெட்டறாங்க. இந்த கொடுமையை என்னால சகிக்க முடியலை,'' வேதனையுடன் கூறினாள் சித்ரா.

''உண்மைதாங்க்கா... யார் மரம் வெட்டினாலும், கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மத்தவங்க திருந்துவாங்க. ஆனா, ஏனோதானோன்னு விட்றாங்க. இந்த தடவையாவது, கலெக்டர் 'சாட்டைய சுற்றுவார்'னு எதிர்பார்க்கலாங்க்கா,''

''ம்...ம்.. பார்க்கலாம்,'' என்ற சித்ரா, ஜில் மோரை குடித்து, தாகம் தணித்து விட்டு, ''ஏன்டி, மித்து. மலைக்கோவில் திருவிழாவில், ராட்டினம் கழன்று விழுந்தது தெரியுமா?''''தெரியுங்க்கா. அங்கே, பொழுதுபோக்கு திடல் அமைக்கறதுக்கு, கலெக்டர் ஆபீசுல அனுமதி வாங்காமலேயே, கல்லா கட்டிட்டாங்க. கலெக்டர் ஆபீசுல இருக்கற பி.ஆர்.ஓ., ஆபீசர் 'சலுகை' காட்டாம, தங்களோட வேலையை செஞ்சாங்கனா பரவாயில்லை''

''இதுமாதிரி கொள்ளை கும்பல், அதிகாரிகளை கவனிச்சிட்டு, பாதுகாப்பில்லாம விளையாட்டை நடத்துறாங்க. இதையும் அதிகாரிங்க கண்டுகிட்டா பரவாயில்லைங்க்கா,''''அதிகாரி எங்கடி கண்டுக்கறாங்க. இப்ப பாரு, டி.ஆர்.டி.ஏ.,வில், ஒரு அதிகாரி ஓவரா ஆட்டம் போட்டதால, அவிநாசிக்கு மாத்திட்டாங்க. அங்க போயும், சும்மா இருக்காம, பஞ்சாயத்து செகரட்டரிகள்கிட்ட 'கவர்மென்ட் வேலை வாங்கித்தர்றேன்'னு சொல்லிட்டு, ரெண்டு பேர்கிட்ட பணம் வாங்கிட்டாராம்,''

''சுத்தி புடுச்ச கை சும்மா இருக்குமாங்க்கா?'' என மித்ரா பதில் சொல்லும்போதே, 'மணிகண்டன் அங்கிள் வந்திருக்காரு. போய் என்னன்னு கேளு, மித்து?'' என, அவளது அம்மா சொன்னார்.மித்ராவும், ஒருநிமிடம் பேசி விட்டு வந்து, ''அவரோட இடத்துக்கு 'இ-அடங்கல்' வேணுமாம். எப்படி அப்ளை பண்றது கேட்டார்,'' என்றாள்.''நீ சொன்னதும், 'இ-அடங்கல்' பத்தி ஒரு நியூஸ். அந்த வேலையை சீக்கிரமா முடிக்கணும்னு, நெருக்கடி கொடுக்கறாங்கன்னு சொல்லி, வி.ஏ.ஓ., போராட்டம் பண்ணியிருக்காங்க. கடைசியில, அதிகாரி சமாதானம் செஞ்சாராம்,''

''வி.ஏ.ஓ.,க்கள் கொடி துாக்கின மாதிரி, 'சவுத்' கொடி புடிச்சாராம், தெரியுங்களா?'' மித்ரா கேள்வி கேட்டாள்.''எனக்கு தெரியாதே...''''அ.தி.மு.க., வில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடக்குதில்ல. திருப்பூர் நிர்வாகிகள் கூட்டத்தில், 'மாஜி' பேசும்போது, 'சவுத்' ஏதோ பேச, 'அனுமதிக்க முடியாது உட்காருங்கனு, சி.எம்., கோபமா உட்கார வச்சுட்டாராம்,''''அடடே... என்ன பிரச்னை?''''அக்கா... 'சவுத்'க்கு, ஆதரவா இருக்கற, 'அன்பான'வருக்கு, மாநகராட்சி தேர்தலில் 'சீட்' இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். அதனாலதான், பிரச்னை நடந்திருக்குது,''

''தேர்தல் அறிவிப்பே இன்னு வரலே. அதுக்குள்ள முட்டல் மோதல் ஆரம்பிச்சிடுச்சா?'' என்று சித்ரா செய்தித்தாளை புரட்டினாள்.அதில் ஒரு செய்தியை படித்துவிட்டு, ''மாணவர்கள்கிட்ட சிக்கிட்டு, டீச்சர்ஸ் படற பாடு கொஞ்சநஞ்சமில்லே'' என்றாள்.''புரியலீங்களே...''''அட.. ஒரு லேடீஸ் ஸ்கூலில், டெஸ்டில், மார்க் கம்மியா வாங்கிட்டானு, ஒரு டீச்சர் மிரட்டியிருக்கார். அடுத்த நாள், அந்த மாணவி, நாலஞ்சு துாக்க மாத்திரையோடு வந்து, என்னை யாராச்சும் பேசினீங்கன்னா, 'மாத்திரையை தின்னுட்டு, சூைஸட் பண்ணுவேன்' என மிரட்டிடுச்சு,''

''இதனால, பயந்த அந்த டீச்சர், எச்.எம்.,கிட்ட போயி, அந்த டீச்சர் கதறி கண்ணீர் வடிச்சாங்களாம்,''''அடக்கொடுமையே...''''அதுக்கப்புறம், அந்த பொண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்து, புரிய வச்சாங்களாம்,''''ஒரு பெண்ணோட கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சொல்வாங்க,''''என்னடி, தத்துவம் பலமா இருக்குது...''''அக்கா... நான் சொல்றதை கேட்டு நீங்களே சொல்லுங்க. 'மங்கல'கரமான ஸ்டேஷனின் லிமிட்டில், மின்சாரம் தாக்கி இறந்தவரோட மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தவிக்கிறார். முதல்வர் நிவாரண உதவி வாங்கிடாலாம்னு, புகார் கொடுத்திருக்காங்க,''

''ஆனா, மூனு மாசமாகியும், எப்.ஐ.ஆர்., போடலையாம். இத்தனைக்கு அதிகாரியும் ஒரு பெண்தான். சரி, கலெக்டர்கிட்ட பெட்டிஷன் கொடுக்கலாம்னு போனா, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, ஸ்டேஷனில் அந்தம்மாவை உட்கார வச்சிருக்காங்களாம்,''''ஏன்.. அப்படி செய்யறாங்கடி?''''ஆமாங்க்கா... அப்பதான், கலெக்டர் ஆபீஸ் போக முடியாதில்ல. அதுக்கப்பறம் தெரிஞ்ச வக்கீல் மூலமாக, ஐகோர்ட்டில் கேஸ் போட்டு, ஆர்டர் வாங்கிட்டாங்களாம். ஆனாலும், இன்னும் எப்.ஐ.ஆர்., போடலையாம்,''''உண்மைதான்டி. தத்துவம் எல்லாம், இப்ப உதவாது. சரி பார்க்கலாம், மாவட்ட அதிகாரியும் பெண்தானே. அவங்க ஏதாவது கண்டிப்பா செய்வாங்க,''''அக்கா... அதே நம்பிக்கையிலதான் நானும் இருக்ேகங்க்கா...'' என்ற சொன்ன மித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.

டிஸ்பிளேயில், 'நிர்மலா' என்ற பெயர் வரவே, ''ஆன்ட்டி நல்லாருக்கீங்களா...'' என ஓரிரு வார்த்தை பேசி விட்டு வைத்தாள்.அப்போது, சித்ரா, சி.ஏ.ஏ., போராட்டம் தொடர்பாக, செய்தித்தாளில் வந்த ஒரு தகவலை சுட்டிக்காட்டி, ''ஆளும்கட்சிகாரருக்கு, ஆதரவாக அவங்க கட்சிக்காரங்களே சப்போர்ட் பண்ணலையாம்,''''அது, என்ன பிரச்னைக்கா?''''தாராபுரத்துல, சி.ஏ.ஏ.,வுக்கு எதிரா மறியல் போராட்டம் நடந்துச்சு. அந்த வழியா வந்த ஆளும்கட்சி நிர்வாகி ஒருவரை பிடித்து, சிலர் தாக்கியிருக்காங்க. இது தெரிஞ்சும் அவரது சொந்தக்கட்சிக்காரங்க யாருமே சப்போர்ட் பண்ணலையாம்,''''விஷயம் தெரிஞ்சு,. இந்து அமைப்புகாரங்க அவரை பார்த்து ஆறுதல் சொல்லி, ஆர்ப்பாட்டம், கடையடைப்புன்னு போராட்டம் அறிவிச்சிருக்காங்க,''

''கமிஷன் விஷயமா இருந்தா வருவாங்க. இதுக்கு போயி எப்படிங்க்கா?'' என்ற மித்ரா, ''அக்கா... திருட்டு போன நகைக்கு 'பில்' கொண்டு வாங்கன்னு ஒரு அதிகாரி 'டார்ச்சர்'பண்றாராம்?''''அது யாருடி... அப்பேர்ப்பட்ட அதிகாரி,''''கொண்டத்துக்காளியம்மன் குடிகொண்டுள்ள ஸ்டேஷன் லிமிட்டில், ஒரு வீட்டில் நகை, பணம் திருட்டு போயிடுச்சு. பாதிக்கப்பட்டவர், கம்ப்ளையன்ட் கொடுக்க போனப்ப, அந்த அதிகாரி, எதுக்கு நகை வாங்கினீங்க? பில் கொண்டு வாங்கன்னு, இழுத்தடிக்கிறாராம்,''

''இத்தனைக்கும், ஐ.ஜி., ஆபீசில் இருந்து எப்.ஐ.ஆர்., போடச்சொல்லி உத்தரவு வந்தும், கண்டுக்கலையாம். இப்படியிருந்தா, மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?''''100 சதவீதம் கரெக்ட்டுங்க்கா...'' சொன்ன மித்ரா, ''இதே மாதிரி, இன்னொருத்தரோட 'இம்சை'யா இருக்குதுன்னு, போலீசே சொல்றாங்க்கா''''யாரு, எந்த ஸ்டேஷனில்?''''

... மலை ஊரில், ஒரு மோதல் தொடர்பாக, புகார் கொடுக்க இருதரப்பும் ஸ்டேஷனுக்கு போனப்ப, அதிகாரி, மினிஸ்டர்' வந்துருக்காருன்னு, கிளம்பிட்டாராம். மீண்டும் மோதிப்பாங்களோன்னு, மத்த போலீசார் உஷாரா இருந்தாங்களாம். இதைப்பத்தி, உளவுப்பிரிவு போலீசார், எஸ்.பி.,க்கு சொன்னதும், திருப்பூரில் இருந்து ஒரு அதிகாரி அவசரமாக கிளம்பிப்போய், மக்கள்கிட்ட பேசி சமாதானம் செஞ்சாராம்,'' என்றாள் மித்ரா.

''இப்படி பல ஸ்டேஷன்களிலும், பஞ்சாயத்து இருக்குது. அதிகாரி ஒரு ரவுண்ட் போனாத்தான் சரியாகும். இல்லாட்டி, மண் 'மேட்டர்' மாதிரிதான் ஆகும்,''''மண் மேட்டரில் அப்படி என்ன நடந்ததுங்க?''''மித்து, அவிநாசிக்கு பக்கத்தில, மண் கடத்தறாங்கன்னு தகவல் வந்தது. உடனே அந்த அதிகாரியும், ரெய்டு போய், ஏழெட்டு லாரிகளை புடிச்சு, தாலுகா ஆபீசில் நிறுத்திட்டாங்க,''''குட்... சரிதானே!''

''இருடி, முழுசா சொல்றேன். 'வண்டிக்கு இத்தனை கொடுங்க, ரிலீஸ் பண்றேன்னு' சொல்லிட்டு, லட்சக்கணக்கில் வாங்கிய அதிகாரி, ஏகப்பட்ட நகை வாங்கி குவிச்சிட்டாராம்,''

''அதுக்கப்புறம், மண் கடத்தினாங்கன்னு, பணம் கொடுத்தவங்க மீதே, ஸ்டேஷனில், கம்ப்ளையன்ட் கொடுத்திட்டாங்க. பணத்தையும் வாங்கிட்டு, இப்படி பண்ணிட்டாங்கன்னு, மண் லாரிக்காரங்க புலம்பி தள்றாங்களாம்,'' என்று சொன்ன சித்ரா, ''ஓ.கே., மித்து, 'சாந்தி' ஆஸ்ரமம் வரைக்கும் போகணும். நான் கெளம்பறேன்,'' என புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X