ராணுவத்தில் பெண்களுக்கு பதவி: ராகுலுக்கு ஸ்மிருதி பதிலடி

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ராணுவத்தில் பெண்களுக்கு பதவியளிப்பது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து காங்., எம்பி ராகுல் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார்.latest tamil newsபெண்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வழங்குவதற்கு, இனி எந்த தடையும் இல்லை. பெண் அதிகாரிகளுக்கு, மூன்று மாதங்களுக்குள் நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று (பிப்.,17) மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து காங்., எம்பி ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பெண் ராணுவ அதிகாரிகள், ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்றும், இதனால் கட்டளை பதவிகள் அல்லது நிரந்தர சேவைக்கு தகுதியற்றவர்கள் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய பெண்ணையும் மத்திய அரசு அவமதித்துள்ளது. பாஜ., அரசு தவறு என நிரூபித்த இந்திய பெண்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டார்.


latest tamil newsஇதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பதிலளித்தார். அதில், ஆயுதப்படையில் பெண்களுக்கு நிரந்தர ஆணையத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் பாலின நீதியை உறுதி செய்தார். காங்., ஆட்சியின் போது பாஜ., பெண்கள் அணி தான் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. இவ்வாறு ராகுலின் கருத்துக்கு ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - Kampala,உகான்டா
18-பிப்-202023:55:34 IST Report Abuse
Sampath Kumar All his because of stupid bafoon Rahul fersokan time, I love my state leader Mr. Kamarajar Sir, great person done any thing like miracle to our Tamilnadu government, because of him his social welfare and by dream for India supposed to be number by again his dreams, by fault from so many other capable peoles were around, he thought by Indira will do so far better than this existing leaders, by heart now we are loosing with another invasion from other countries.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-பிப்-202022:53:04 IST Report Abuse
madhavan rajan தன கட்சியில் நடப்பதும் தெரியாது. தங்கள் ஆட்சியில் நடப்பதும் தெரியாது. இவனெல்லாம் ஒரு தலைவன்னு இவன் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொண்டு செய்து போடும் ஊடகங்கள்தான் தவறு செய்கின்றன. சட்டீஸ்கரில் காங்கிரஸ் அரசின் ஆணையை எதிர்த்து போட்ட வழக்கில் நீதிமன்றம் அந்த அரசு செய்தது தவறு என்று கூறியும் அதை காங்கிரஸ் அரசே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதன் மீது இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கூறிய கருத்துக்கு பாஜக அரசு இருப்பதால் அப்படித்தான் தீர்ப்பு வரும் என்று கூறினார். அப்படிப்பட்ட அறிவிலியின் கருத்துக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
Rate this:
Cancel
raja - chennai,இந்தியா
18-பிப்-202020:07:48 IST Report Abuse
raja வந்தாச்சா ராகுலை தேடி.. எங்கா கா ணும்னு பார்த்தேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X