ராணுவத்தில் பெண்களுக்கு பதவி: ராகுலுக்கு ஸ்மிருதி பதிலடி| Dinamalar

ராணுவத்தில் பெண்களுக்கு பதவி: ராகுலுக்கு ஸ்மிருதி பதிலடி

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (59)
Share

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ராணுவத்தில் பெண்களுக்கு பதவியளிப்பது குறித்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து காங்., எம்பி ராகுல் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார்.



latest tamil news



பெண்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வழங்குவதற்கு, இனி எந்த தடையும் இல்லை. பெண் அதிகாரிகளுக்கு, மூன்று மாதங்களுக்குள் நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று (பிப்.,17) மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து காங்., எம்பி ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பெண் ராணுவ அதிகாரிகள், ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்றும், இதனால் கட்டளை பதவிகள் அல்லது நிரந்தர சேவைக்கு தகுதியற்றவர்கள் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடுவதன் மூலம் ஒவ்வொரு இந்திய பெண்ணையும் மத்திய அரசு அவமதித்துள்ளது. பாஜ., அரசு தவறு என நிரூபித்த இந்திய பெண்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டார்.


latest tamil news



இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பதிலளித்தார். அதில், ஆயுதப்படையில் பெண்களுக்கு நிரந்தர ஆணையத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் பாலின நீதியை உறுதி செய்தார். காங்., ஆட்சியின் போது பாஜ., பெண்கள் அணி தான் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. இவ்வாறு ராகுலின் கருத்துக்கு ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X