மோடிக்கு நன்றி தெரிவித்த ரிக்சா தொழிலாளி | Dinamalar

மோடிக்கு நன்றி தெரிவித்த ரிக்சா தொழிலாளி

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (27)
Share

இந்த செய்தியை கேட்க

வாரணாசி: தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடியை ரிக்சா தொழிலாளி ஒருவர் சந்தித்து நன்றி தெரிவித்தார்.



latest tamil news



பிரதமர் மோடி,வளர்ச்சிக்கு நேரடிப்பார்வையில் தேர்வு செய்யப்பட்ட டோம்ரி கிராமத்தை சேர்ந்தவர் மங்கள் கேவத். ரிக்சா ஓட்டும் தொழிலாளியான இவர், கடந்த 12ம் தேதி தனது மகள் திருமணம் தொடர்பான அழைப்பிதழை பிரதமருக்கு டில்லி மற்றும் வாரணாசி முகவரிக்கு அனுப்பி வைத்தார். இதனை பெற்ற பிரதமர், வாழ்த்து கடிதம் ஒன்றை கேவத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை பார்த்த அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி பல்வறு நலத்திட்ட பணிகள் துவக்கி வைப்பதற்காக வாரணாசி சென்றார். இங்கு பல நிகழ்ச்சிகள் இடையே ரிக்சா தொழிலாளி ஒருவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அப்போது கேவத், நான் ஒரு ரிக்சா தொழிலாளி என்று தெரிந்தும் எனது மகள் திருமணத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு நன்றி. தங்களின் கடிதத்தை உறவினர்கள் அனைவரிடமும் காண்பித்து பெருமையாக உணர்ந்தேன் என பிரதமரிடம் கூறினார்.


latest tamil news



மங்கள் கேவத் தூய்மை இந்தியா திட்டத்தில் கங்கை சுத்தம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X