அரசியல் செய்தி

தமிழ்நாடு

யார் ஜல்லிக்கட்டு நாயகன்? : துரைமுருகனுக்கு விஜயபாஸ்கர் பதில்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
Jallikattu,DuraiMurugan,Vijayabhaskar,ஜல்லிக்கட்டு,துரைமுருகன்,விஜயபாஸ்கர்,சட்டசபை

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஜல்லிக்கட்டு நாயகன் குறித்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

கடந்த பிப்.,14ம் தேதி 2020-21 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விவாதம், சட்டசபையில் நடந்து வருகிறது. இன்று (பிப்.,18) நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார்?. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பன்னீர்செல்வத்தை அழைத்து சென்று மாடு பிடிக்க பன்னீர்செல்வத்தை அனுப்பினால் எம்எல்ஏ.,க்கள் பார்க்க ஆவலாக இருக்கிறோம், என்றார்.


latest tamil news


இதற்கு பதலளித்து விஜயபாஸ்கர் பேசியதாவது: ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதி பெற்றுத்தந்ததால் ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கின்றனர். துரைமுருகன் விரும்பினால் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்கிறோம். அவர் பார்வையாளராக வந்தாலும் சரி, மாடு பிடி வீரராக வந்தாலும் சரி. இவ்வாறு அவர் பேசினார். இருவரின் இந்த உரையாடலால் சட்டசபையில் சலசலப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
19-பிப்-202004:05:36 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சட்டசபையில் நகைச்சுவையும் வேண்டும்..வரவேற்போம்.இல்லாவிட்டால் பின்பெஞ்சில் இருப்பவர்கள் தூங்கிவிடுவார்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
19-பிப்-202001:08:02 IST Report Abuse
Balaji தொளபதி இந்தா சண்டிக்கீ போனாருன்னு கொஞ்சம் வழக்கம் ஜொள்ளுங்க ஜாமி. அப்புடியே உங்களோட துச்சாதன மஹாத்ம்யயத்த கொஞ்சம் விளக்கி நவீன துச்சாதனனனு பட்டம் கொடுத்துக்கோங்க.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18-பிப்-202021:41:47 IST Report Abuse
sankaranarayanan ஜல்லிக்கட்டு நாயகன் பன்னிர்செல்வம் என்பது எப்படி என்று - குறித்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனுக்கு ஒரு விண்ணப்பம். எங்கு நடந்த போரில், சுடலை தளபதியாக நியமிக்கப்பட்டார்? எத்தனை தடவை போர் செய்தார்? துப்பாக்கி துருக்கி பழக்கம் உண்டா? எத்தனை தடை சுட்டார், எத்தனை பெயர்களை? இந்தியாவில் எந்த திசையில் போர் புரிந்தார்? இவைகளுக்கு விடை கொடுத்தால், ஜல்லிக்கட்டு நாயகன் பன்னிர்செல்வம் என்பது எப்படி என்று கூற முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X