பஹவல்பூரில் பதுங்கியிருக்கும் மசூத் அசார்: உளவுத்துறை தகவல்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
Intel, pinpoint, JeM, MasoodAzhar, Bahawalpur, பஹவல்பூர், பயங்கரவாதி, மசூத்அசார்

இந்த செய்தியை கேட்க

லாகூர்: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி மவுலானா மசூத் அசார், பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர் பயங்கரவாத முகாம் அருகே, குண்டு துளைக்காத வீட்டில், பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக வசித்து வருவதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்.,14ம் தேதி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் பின்னணியில் இருந்த இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்' என, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியா முறையிட்டுள்ளது.
பாகிஸ்தானிலேயே பதுங்கியிருந்த மசூத் அசார் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், பின்னர் ஒப்புக்கொண்டது. பிரான்ஸ் தலைவர் பாரீஸ்நகரில் எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை குழு மாநாடு நடந்தது. இதில் பாக். அமைச்சர் முகமது ஹமீத் அசார் கூறியது, ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்துடன் காணாமல் போய்விட்டார். அவரை தேடும் பணி நடக்கிறது என்றார்.


latest tamil news



இந்நிலையில் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், மசூத் அசார், பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாம் அருகே, பலத்த பாதுகாப்புடன் குண்டு துளைக்காத வீட்டில் வசித்து வருகிறார். 1.பகவல்பூர் கவுசார் காலனி, பஹவல்பூர். 2. மதரசா பிலால் ஹபிசி, பன்னு, கைபர் பக்துன்க்வா, 3. மதரசா மஸ்ஜித் இ லுக்மன், லகி மர்வாத் கைபர் பக்துன்க்வா என்ற முகவரிகளில் மவுலானா வசித்து வந்துள்ளார். பதன்கோட் விமான நிலையம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, 2016 ல் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போன் எண்களில் ஒன்று, பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத தொழிற்சாலையுடன் தொடர்புடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது, என தெரிவித்தன.

இந்திய உளவுத்துறை மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அறிக்கைப்படி, மசூத் அசார் உயிருக்கு ஆபத்தான நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், அவரது சகோதரர் அப்துல் ரவுப் ஆல்வி தான், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை வழிநடத்தி வருகிறார். புல்வாமா மற்றும் பதன்கோட்டில் நடந்த தாக்குதலுக்கு இவரே முக்கிய காரணம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்பை தனியார் அமைப்பு போல் மசூத் அசார் நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் அவரது குடும்பத்தினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-பிப்-202004:34:31 IST Report Abuse
 nicolethomson கழக குடும்ப சேனல் போல குடும்ப மத தீவிரவாதமா?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-பிப்-202000:22:24 IST Report Abuse
Rajagopal அண்ணா அறிவாலயத்தில் தேடிப் பாருங்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-பிப்-202020:17:25 IST Report Abuse
RajanRajan இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், மசூத் அசார், பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாம் அருகே, பலத்த பாதுகாப்புடன் குண்டு துளைக்காத வீட்டில் வசித்து வருகிறார் - இதிலே இருந்து இங்குள்ள எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டியது - நம் உளவு துறை பாகிஸ்தானை அணுஅணுவாக அவர்களின் தீவிரவாத முகாம்கள் வரை அலசி கொண்டிருக்கிறது. அதுபோல இந்தியாவிற்குள்ளே உள்ள பிரிவினைவாதிகள் முதல் அரசியல் பின்னணி உள்ள பாகிஸ்தானி தீவிரவாதிகள் வரை கண்கொத்தி பாம்பாக வளையம் வைத்து வருகிறது. எனவே குறிப்பாக இந்த அரசியல்வாதிகள் சார்ந்த பிரிவினைவாதிகள் கிடுக்கி பிடியில் சிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. எனவே மசூத் அசாரை ஒரு நொடியில் நம் கமாண்டோ போர்ஸ் களால் ஒசாமா மாதிரி புகுந்து அடித்து விடலாம். ஆனால் அப்படி செய்தால் அது பாகிஸ்தானுக்கு அனுகூலமாகி விடும். பாகிஸ்தானின் முள் பயங்கரவாதம் எனவே அந்த பயங்கரவாதி முள்ளை வைத்து தான் உலக அரங்கில் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட் ஆகி மொத்த பாகிஸ்தானும் திவால் ஆக வேண்டும். அன்று உலக வரை படத்தில் பாகிஸ்தான் என்ற சுவடே இல்லாமல் போகலாம். ஜெய் மோடி சர்க்கார். இந்நேரம் ரபேல் பப்புவுக்கும் வடை சுடும் சுடலைக்கு போராத காலம் தான் போ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X