பீஹாருக்கு உறுதியான தலைவர் தேவை: பிரசாந்த் கிஷோர்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
prasantkishore, kishore, patna, bjp, jdu,  Nitish, Nitishkumar, Bihar, alliance, பிரஷாந்த்கிஷோர்,கிஷோர், நிதிஷ், நிதிஷ்குமார், கூட்டணி, பாஜ,

பாட்னா: பீஹார் வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும், தற்போது, மாநிலத்திற்கு உறுதியான தலைவர் தேவைப்படுவதாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பீஹாரை சேர்ந்த பிரஷாந்த் கிஷோர், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் அமைப்பை நடத்தி வருகிறார். இப்படி, திரைக்குப் பின் செயல்பட்ட பிரஷாந்த், கடந்த ஆண்டு நேரடி அரசியலுக்குள்ளும் நுழைந்தார். பீஹாரின், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியில் சேர்ந்த அவர், அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக பிரசாந்த் பேசியதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் பாட்னா வந்த பிரசாந்த் கிஷோர், '' பாட் பீஹார் கி'' என்ற திட்டத்தை துவக்கினார். இதன் மூலம், பீஹார், இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் 10 மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.


latest tamil news



மேலும் அவர் கூறுகையில், கட்சியின் கொள்கை குறித்து பல முறை எனக்கும், நிதிஷூக்கும் இடையே விவாதம் நடந்துள்ளது. அப்போது, மஹாத்மா காந்தியின்கொள்கையில் இருந்து கட்சி எப்போதும் தடம்மாறாது என நிதிஷ் கூறுவார். ஆனால், காந்தியை கொன்றவர் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கும் நபர்களுடன், நிதிஷ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. என்னை பொறுத்தவரை, காந்தியும் கோட்சேவும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது.
பா.ஜ., - நிதிஷ் கொள்கை ஒத்து போகாது. கொள்கையை அக்கட்சியுடன், அவர் சமரசம் செய்துள்ளார். நிதிஷ்க்கு பா.ஜ., கூட்டணி தேவையில்லை. கூட்டணி அமைத்த பின்னர் அவர் மாறிவிட்டார். இக்கூட்டணியால் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை.

பீஹார் வளர்ந்து வரும் சூழ்நிலையில், அதனை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட வேண்டும். அப்படி செய்தால், பீஹார் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன? 2005 ல் மாநிலம் எப்படி இருந்ததோ, இன்றும் அப்படித்தான் உள்ளது. இந்தியாவில் ஜார்க்கண்டிற்கு அடுத்து, பீஹார் இன்னும் பின்தங்கிய மாநிலமாக தான் உள்ளது. 2005 ல் பீஹார் பின்தங்கிய மாநிலமாக உள்ளதாக தெரிவித்தேன். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது பீஹார் இன்னும் அப்படியே உள்ளது. தற்போது பீஹாருக்கு நல்ல தலைமை தேவைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. இவ்வாறு பிரஷாந்த் கிஷோர் கூறினார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், நிதிஷ்குமார் - எனக்கும் இடையே உறவு நல்ல நிலையில் தான் இருந்தது. என்னை மகனை போல் அவர் நடத்தினார். அவரின் முடிவை நான் மதிக்கிறேன் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohandas - sydney,ஆஸ்திரேலியா
19-பிப்-202009:49:17 IST Report Abuse
mohandas அண்ணா பேசாமல் ஸ்டாலின் அவர்களை பீகார் முதல்வர் ஆக்குங்கள் தமிழ்நாடு தப்பிக்கும் நீங்கள் வாங்கின காசும் தப்பிக்கும்
Rate this:
Cancel
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
19-பிப்-202009:02:48 IST Report Abuse
ESSEN தமிழக மக்கள் இந்த கிஷோர் பாட்சா எல்லாம் பலிக்காது என்று உறுதி படுத்த வேண்டும்
Rate this:
Cancel
19-பிப்-202000:53:03 IST Report Abuse
கருணாகரன் அப்போ பிஹாருக்கு தேவை ஒரு சுடலை. கரெக்டா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X