பொது செய்தி

இந்தியா

மகாத்மா காந்தி ஒரு தீவிர ஹிந்து: ஆர்.எஸ்.எஸ்., தலைவர்

Added : பிப் 18, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
MahatmaGandhi, Staunch, Hindu, RSS, Chief, MohanBhagwat, மகாத்மாகாந்தி, தீவிரஹிந்து, ஆர்எஸ்எஸ், தலைவர், மோகன் பகவத்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மகாத்மா காந்தி ஒரு ஆச்சாரமான தீவிர ஹிந்து என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தேசிய கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ராஜ்புட் எழுதிய, 'மகாத்மா காந்தியின் பொருத்தம்' என்னும் புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: காந்தி, இந்தியாவை புரிந்துகொள்ள பயணம் மேற்கொண்டு, அபிலாஷைகளையும் துன்பங்களையும் கொண்ட ஒருவரானார். அதனால் தான் அவர் ஹிந்துவாக இருப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை. தான் ஒரு தீவிர ஹிந்து என அவர் கூறினார். மற்ற மதங்களை மதிக்கவும் கற்று கொடுத்தார்.


latest tamil newsகாந்தி கனவு கண்ட இந்தியா இன்னும் உருவாக்கப்படவில்லை. தற்போதைய தலைமுறையினர் மீது அவர் முழு நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது இல்லையெனினும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் அமைதியுடன் பணியாற்ற முடியும் என சொல்லும் காலம் வரும். சில நேரங்களில் காந்தியின் இயக்கம் தவறாக நடந்தது. அதில் அவரது முறை தவறாக இருந்தாலும், நோக்கம் தவறாக இருக்காது என அறிந்திருந்தார். தவறுக்கு அவரே பொறுப்பேற்பார். ஆனால் இப்போதுள்ள இயக்கங்களில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருந்தால், அதற்கு பொறுப்பேற்க யாரும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19-பிப்-202014:11:40 IST Report Abuse
Sridhar காந்தி யை ஒரு தீவிர ஹிந்து என்றோ அல்லது முஸ்லீம் என்றோ அவ்வளவு சுலபமாக கூறிவிட முடியாது. அவர் நல்லவரா கெட்டவரா என கேட்கலாம். அதற்கும் விடை காண்பது கடினம் ஏனென்றால், அவரை பற்றிய பல உண்மைகளை காங்கிகள் மறைத்து விட்டார்கள். எப்போது எல்லா உண்மைகளும் வெளிவந்து நேர்மையான விவாதத்துக்கு உட்படுகிறதோ, அப்போதுதான் அவரை பற்றி வரையறுக்க முடியும். அவருடைய கிலாபாத் ஆதரவு நிலை, இரவு செயல்பாடுகள், வன்முறை நிகழ்வுகளை கண்டும் காணாத போக்கு ஆகியவற்றை பற்றி தெரிந்தவர்கள், அவரை மிக மோசமான பேர்வழி என தீர்மானித்து விடுவார்கள். ஆனால், இவற்றை எல்லாம் மீறி அவர் எதோ சாதனைகள் புரிந்ததால் தானே உலகமெங்கும் அவர் இன்று வரை (ஆப்பிரிக்கா தவிர) போற்றப்படுகிறார்? ஆகவே, முழுவதாக தெரியும் வரை குருடன் யானையை தொட்டு அதன் உருவத்தை கணித்த கதைதான்
Rate this:
Share this comment
Cancel
Dhanakumar - ca,யூ.எஸ்.ஏ
19-பிப்-202006:34:33 IST Report Abuse
Dhanakumar உண்மை, இப்பொழுதாவது அஹிம்ஸை என்றால் என்ன என்று உணர்ந்து அதை பின் பற்ற முயன்றி செய்யவும்
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
19-பிப்-202006:09:12 IST Report Abuse
spr ஒவ்வொரு ஊர்லேயும் ஒரு பெரிய மனிதர் இருப்பார் ஊரே அவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் சில நேரங்களில் இளவட்டங்கள் சிலர் அவரை எதிர்ப்பார்கள் அப்பொழுது ஊரே திரண்டு வந்து அந்த இளவட்டத்தைக் கண்டிக்கும். அப்பொழுது பெரியவர் ஏகத்தலமாகச் சொல்லுவார் "விடலே அவன் எண்ணத்தைக் கிழிச்சுடப்போறான் கொஞ்சம் ஆடட்டுமே பாப்போம். சின்னப்பசங்க கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க விட்டுப் பிடிப்போம் அவங்களுக்கும் கொஞ்சம் சுதந்திரம் வேணுமில்லே நம்மை மீறி என்ன செய்துடுவாங்க " என்பார். அவர்களுக்கு தங்களின் ஆளுமையின் பேரில் அத்தனை நம்பிக்கை எல்லோரும் அவரை "என்ன பெருந்தன்மை " என்பார்கள் அவரும் மிதப்பாக இருப்பார் அவர் சொல்வது வேதம் என்றாகும் ஆனால் அவர் போதாத காலம் அவரது ஆதரவாளர்களிலேயே சிலருக்கு அது பிடிக்காது ஆனால் வெளிப்படையாக அவரிடம் சொல்ல அச்சம். மறைமுகமாக அவர்களின் ஆதரவினால், அந்தச் சின்னப்பசங்கள் ஒருநாள் அந்த பெரியவரைப் போட்டுத் தள்ளிடுவாங்க நம்ம தலைவர்களும் (குறிப்பாக காந்தி ராஜாஜி போன்றோர்) இப்படி சிலருக்குச் சலுகை கொடுத்தே தானும் அழிந்து தனது ஆதரவாளர்கள் அழியக் காரணமானவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X