மஹாராஷ்டிராவில் என்.பி.ஆர்.,க்கு தடையில்லை

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
CAA, NPR, Maharashtra,  UddhavThackeray, என்பிஆர், என்ஆர்சி, உத்தவ்தாக்கரே, சிஏஏ, குடியுரிமைசட்டம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி :மஹாராஷ்டிராவில் என்.பி.ஆர்., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவதற்கு தடையில்லை எனக்கூறியுள்ள, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, சிஏஏ குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை எனவும், அதே நேரத்தில் என்.ஆர்.சி., அமல்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:
என்பிஆர் படிவங்கள் குறித்து தான் நேரடியாக ஆய்வு செய்வேன். என்.பி.ஆர், கணக்கெடுப்பால் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது. அதேநேரத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. சிஏஏ, என்ஆர்சி என்பது வேறு, என்பிஆர் என்பது வேறு. சிஏஏ அமல்படுத்தினால் யாரும் கவலைப்பட தேவையில்லை. என்ஆர்சி அமல்படுத்தினால் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஆதிவாசிகளும் பாதிக்கப்படுவார்கள். தற்போது வரை என்.ஆர்.சி., குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. என்பிஆர் என்பது கணக்கெடுப்பு மட்டுமே. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த கணக்கெடுப்பால் யாரும் பாதிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsமஹாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடக்கும் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்று கட்சிகளும் என்.பி.ஆர்., குறித்து ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றன. லோக்சபாவில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த சிவசேனா, ராஜ்யசபாவில், ஓட்டெடுப்பின் போது வெளிநடப்பு செய்தது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
19-பிப்-202009:32:33 IST Report Abuse
 N.Purushothaman இப்போ ராங்கிரஸ் மற்றும் திருட்டு திராவிடால்ஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட நடத்தக்கூடாதுன்னு சொல்றானுங்க .....
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
19-பிப்-202008:42:41 IST Report Abuse
Nallavan Nallavan பெரும்பான்மை ஒட்டுக்கும் ஆசை .......
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
19-பிப்-202007:46:38 IST Report Abuse
sridhar Thandavakkon. I pity your ignorance. What if telengana and Andhra assemblies pass resolutions against CAA. It has already become an act with president’s assent. Who are they to stop caa, nrc etc. you people are cheating gullible Muslims with false information for cheap political purposes. National interest is of no importance to you. Cheap people.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X