பொது செய்தி

இந்தியா

5வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா: இங்கி., பிரான்சை முந்தியது

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
India, Economy, Growth, LargestEconomy, UK, France, இந்தியா, பொருளாதாரம், வளர்ச்சி, அறிக்கை, ஜிடிபி

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடந்த 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளிய இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்ட வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ என்ற அமைப்பு, பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இதன் மூலம் 2.83 டிரில்லியன் டாலருடன் இருக்கும் இங்கிலாந்து மற்றும் 2.71 டிரில்லியன் டாலருடன் இருக்கும் பிரான்ஸ் தரவரிசையில் பின்தங்கியுள்ளன.


latest tamil news


தன்னிச்சையான பொருளாதார கொள்கையில் இருந்து மாறுபட்டு, திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறி வருகிறது. வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளில், இந்தியாவின் ஜிடிபி 10.51 டிரில்லியன் டாலராக உள்ளது, இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகமாகும். இருப்பினும், இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி வளர்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக (7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக) சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-202016:43:32 IST Report Abuse
Saleem "5வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா" - ரிசர்வ் வங்கி வைப்பு நிதி ... LIC ... ஏர் இந்தியா .. ரயில்வே .... துறைமுகம் ... விமானநிலையம் .... BSNL .... அனைத்தும் விற்க பட்டது... பிறகு எப்படி?
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
19-பிப்-202014:08:28 IST Report Abuse
madhavan rajan சிதம்பரம் உடனே பேட்டி கொடுப்பார். மோடியின் தலைமையில் இந்தியா மிகவும் மோசமாக இருக்கிறது என்று உலக அரங்கில் கூறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
19-பிப்-202012:42:24 IST Report Abuse
Sivak இந்தியா நமது தாய்நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற செய்தி கூட அயல் நாட்டு அடிமைகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது ... இதுல குடியுரிமை கேட்டு போராட்டம் அதுவும் அடுத்த நாட்டு காரா புயல்களுக்கு ... வெக்கமாவே இல்லை உங்களுக்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X