ஒரு பாட்டில் தண்ணீர், கொஞ்சம் காய்கறி: சீனாவில் தவிக்கும் இந்திய தம்பதி

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: 'ஒரு பாட்டில் தண்ணீர்... சிறிதளவு காய்கறிகள் மட்டுமே எங்களிடம் மிஞ்சியுள்ளன. அதுதான் இப்போது எங்களுடைய கடைசி நம்பிக்கையாக இருக்கிறது' என, சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய தம்பதி, வீடியோவில் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


'கோவிட்-19' எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சீனாவில் வாழும் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை, அந்தந்த நாட்டு அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் தங்கியிருந்த, 650 இந்தியர்களை, விமானம் மூலம் இந்தியா அரசு மீட்டது.இந்த நிலையில், வுஹானில், இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் குடும்பம் ஒன்று, சிக்கித் தவித்து வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news


வுஹானிலுள்ள டெக்ஸ்டைல் பல்கலைக்கழகத்தில், இணை பேராசிரியராக ஆஷிஷ் யாதவ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நேகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சையால், இந்தியா அனுப்பிய விமானத்தில் அவர்களால் சீனாவிலிருந்து வெளியேற முடியவில்லை.அவர்கள், வுஹானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளனர்.

தாங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை விவரித்து, சில வீடியோக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

கடந்த, 15ம் தேதி வெளியிட்ட வீடியோவில், 'நாங்கள் பல்கலைக்கழகத்தின் அருகில்தான் தங்கியுள்ளோம். எங்கள் குடியிருப்பில் யாரும் இல்லை. ஒரே ஒரு பாட்டில் தண்ணீர்... சிறிதளவு காய்கறி மட்டுமே எங்களிடம் உள்ளன. இவைதான் இப்போது எங்களுடைய கடைசி நம்பிக்கையாகவும் இருக்கிறது' எனக் கூறியிருந்தனர்.


latest tamil news


நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோவில், 'வானிலை மோசமடைந்து வருகிறது. லேசான மழையும் பனிப்பொழிவும் உள்ளது. இங்குள்ள அதிகாரிகளிடம், தண்ணீரும் உணவும் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த பின், சிறிதளவை அனுப்பியுள்ளனர். எங்களை விரைவில் மீட்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த வீடியோவை பார்த்தவர்கள், 'சீனாவில் எஞ்சியிருக்கும் இந்தியர்களும் உடனடியாக மீட்கப்பட வேண்டும்' என, வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news


இவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், சீனாவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில், 'சீனாவுக்கு உதவி செய்யும் விதத்தில், மருத்துவப் பொருட்களை இந்தியா இந்தவாரம் அனுப்ப உள்ளது. அந்த விமானம் திரும்பும்போது, இந்தியா செல்ல விரும்பும் இந்தியர்கள் அதில் செல்லலாம். அதற்கு துாதரகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்' எனப் பதிவிட்டுள்ளது. மேலும், அவர்கள் தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்களையும் பதிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-202017:58:16 IST Report Abuse
Radhakrishnan Radhakrishnan ஏன் எவ்வளவுநாள் வெயிட்பண்ணுனீங்க ?சம்பளம் அதிகமோ ?
Rate this:
காவல்காரன்: சுடலைஏன் நீங்க போற எண்ணம் உள்ளதா?...
Rate this:
Cancel
Thiru, Coimbatore - Coimbatore,இந்தியா
18-பிப்-202017:07:55 IST Report Abuse
Thiru, Coimbatore மதம் மதம் மதம்னு அடிச்சுக்கிறவங்க எல்லாம் வாங்க... இயேசுவையும் அல்லாவையும் சிவனையும் அனுப்பி வையுங்கள்.. அவர்கள் கொரானாவை அழித்து வையகத்தை காப்பாற்றட்டும் இயற்கையின் முன் யாரும் பெரியவர் இல்லை.. இனி மேலாவது மதங்களை உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்து விட்டு சக மனிதர்களை மனிதத்துடன் நடத்துங்கள்.. இயற்கையின் படைப்பில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நான் பெரியவன் நீ சிறியவன் என்பது கிடையாது என்பதை உணருங்கள்....
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-202017:18:30 IST Report Abuse
Janarthananநீ கண்டமெனக்கி தின்று விட்டு கடைசியில் கடவுள் மேல் பழி போட்டு தப்பித்து கொள்வாயோ ??? உன் செயல்களுக்கு நீயே பொறுப்பு...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-பிப்-202018:12:48 IST Report Abuse
Dr. Suriyaஅப்புறம் ஏன்யா பிள்ளையாரை கும்பிடறவனை சாத்தானை கும்பிடறான்.... ஹராம் இன்னு சொல்லரணுவோ... அவங்க சொல்றதால தான் இப்போ இந்து ஒற்றுமை அதிகரிக்குது... இந்து ஒற்றுமை அதிகரிக்கும்போது மட்டும் மதம் இல்லை மனிதனை மட்டும் பாருன்னு சொல்லிகிட்டு வரீங்க.......
Rate this:
Cancel
18-பிப்-202016:48:19 IST Report Abuse
மாட்டுக்குப்பன் சொந்தநாட்டில் கூழோ கஞ்சியோ இதில் திருப்திஅடையாமல் பிரியாணிக்கு ஆசை பட்டாய் அல்லவா ராஜகுமாரா அனுபவி உன்னை மாதிரி சொந்த நாட்டை மறந்து ஓடிய வனுக்கெல்லாம் இதான் கெதி
Rate this:
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
19-பிப்-202007:23:20 IST Report Abuse
குறையொன்றுமில்லைஇப்படி பேசுறதாலே தான் கிணத்து தவளையா இருக்கே...
Rate this:
Baranitharan - Trichy,இந்தியா
19-பிப்-202009:24:55 IST Report Abuse
Baranitharanநீங்க நாட்டுக்கு என்ன நல்ல காரியம் பண்ணுணிங்க பாஸ்? அவங்களால வெளிநாட்டுல உழைக்கிற பணம் எவ்வளவு இந்தியா க்கு வருது தெரியுமா? உனக்கு வாய்ப்பு கிடைக்காட்டி பொறாமை கூடாது நண்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X