சொகுசு கப்பலில் மேலும் 99 பேருக்கு கொரோனா

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

டோக்கியோ: சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசுக்கு இதுவரை, 1,770 பேர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news




இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து, ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்திற்கு வந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், அந்த கப்பல் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டு, அதிலிருந்து 3,700 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


latest tamil news




கப்பலில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, 355 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news




இந்நிலையில் கப்பலில் உள்ள மேலும் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை ஜப்பான் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் கப்பலில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. அதில், ஐந்து பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சொகுசு கப்பலில் இருந்த அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு, தனி விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது. கப்பலில் உள்ள, 137 இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
18-பிப்-202020:34:20 IST Report Abuse
தமிழ் மைந்தன் புதிய பெயரில் பிறந்துள்ள கொரானா மெரினாவில் முரசொலி படிக்க வரலாம்.......
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-பிப்-202019:00:46 IST Report Abuse
தமிழ்வேல் இதற்கு, புருஷ் ஜியின் கமெண்ட் வரவேற்கப்படுகின்றது... // கப்பலில் உள்ள, 137 இந்தியர்களையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. // அவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம் நீளுகின்றதா வேற 10 நாளுக்கும் முன்னால செய்தி வந்ததே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X