அரசியல் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்

Added : பிப் 18, 2020
Share
Advertisement

சென்னை: டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது :



latest tamil news



திமுக ஆட்சி காலத்தில் 2006-2011 ஆம் ஆண்டு வரை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் உதவி பல் மருத்துவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது. இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது. அவர்களின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடு தொடர்பான சோதனையின் போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கி இருக்கிறது.


latest tamil news



இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் மார்ச் 19-ஆம் தேதி விசாரணைக்கு வரும்போதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பல ஊழல்களை செய்து ஊழல் கட்சியாக விளங்கும் தி.மு.க தற்போது சிறப்பாக செயல்பட்டு முறைகேடு செய்த 40 க்கும் மேற்பட்டோரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையை குறை கூறுவதோடு டி.என்.பி.எஸ்.சி மற்றும் அ.தி.மு.க அரசு மீது குற்றம்சாட்டி வருவது வேடிக்கையாக உள்ளது.இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X