விட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (146)
Share
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தாலும், எதற்கும் பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதனால் அவரது ‛‛அன்புத் தம்பிகள்'' எது உண்மை என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர். சீமான், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ல்
சீமான், விஜயலட்சுமி, நாம்தமிழர், புகார், வீடியோ, சர்ச்சை

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தாலும், எதற்கும் பதிலளிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதனால் அவரது ‛‛அன்புத் தம்பிகள்'' எது உண்மை என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

சீமான், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ல் போலீசில் புகார் அளித்தார். சமீபத்தில் நடந்த தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்று சீமான் வழிபாடு நடத்தியதை கடுமையாக சாடிய விஜயலட்சுமி, வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


latest tamil newsஅதில், கடவுள் இல்லை எனவும், சிவலிங்க வழிபாடு பற்றி அசிங்கமாகவும் விமர்சித்துவிட்டு, சிவபெருமான் கும்பாபிஷேகத்திற்கு செல்கிறீர்கள், முருகன் என் பாட்டன் என்கிறீர்கள். அசிங்கமாக இல்லையா உங்களுக்கு. ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவனை, சிவன் முன் மரியாதை அளித்து உள்ளீர்கள். எத்தனை பெண்களை நீங்கள் அழ வைத்துள்ளீர்கள். இவ்வாறு அந்த வீடியோவில் பேசி சர்ச்சையை கிளப்பினார்.

அதனைத் தொடர்ந்து, சீமானுடன் அவர் இருக்கும் அந்தரங்க வீடியோவையும் விஜயலட்சுமி வெளியிட்டார். அரைநிர்வாணத்துடன் விஜயலட்சுமியுடன் சீமான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற அந்த வீடியோவால் சீமானும் அவரது தம்பிகளான கட்சி தொண்டர்களும் ரொம்பவே கலக்கமடைந்தனர். இதனால் தம்பிகள், விஜயலட்சுமியை தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.


latest tamil news


இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் மற்றொரு வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில், சீமான் மீது பாலியல் புகார் கொடுத்ததற்காக பலமுறை தன்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், அதிலிருந்து தப்பி பிழைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி கருத்து பதிவிடும் தம்பிகள் சீமானின் ஊதுகுழல்கள் எனவும் கூறினார்.


latest tamil news


எவ்வளவு தான் முட்டுக்கொடுத்தாலும் அடுக்கடுக்காக புகார் தெரிவித்து தொடர்ந்து வீடியோ வெளியிடும் விஜயலட்சுமியை சமாளிக்க முடியாமல் தம்பிகள் தயங்கி நிற்கின்றனர். சின்ன விஷயமானாலும் மூக்கை நுழைத்து கருத்து கூறுவதையும், மேடைக்கு மேடை கதை சொல்லுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள சீமான், விஜயலட்சுமி பற்றி மட்டும் எந்த கருத்தும் கதையும் சொல்லாமல் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இருந்து 'எஸ்கேப்' ஆகிவிடுகிறார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X