'இது இந்தியா அல்ல... பாகிஸ்தான்:பாக்., நீதிபதி சர்ச்சை பேச்சு

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன், கடந்த மாதம் போராட்டம் நடத்திய, 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஜாமீன் மனு குறித்த விசாரணை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.விசாரணையின்போது தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ் கூறியதாவது:



latest tamil news


ஒரு ஜனநாயக நாடு, மக்களின் கருத்து சுதந்திரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு, மக்கள் அச்சம் கொள்ளக் கூடாது. நீதிமன்றம் மக்களின் உரிமையைக் காக்கவே இருக்கிறது.இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும். அதனால் போராட்டம் நடத்த நினைத்தால் அனுமதி கேளுங்கள். கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள்.இவ்வாறு கூறிய நீதிபதி, 23 தொழிலாளர்களின் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தார்.கைது செய்யப்பட்ட, அமார் ராஷித் என்பவர், தன்மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப்பெற்ற ஆவணத்தை, டுவிட்டரில் பதிவிட்டார். அதில், 'எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இந்த நாட்டில், மக்களின் எதிர்ப்பு, அமைதியான போராட்டம் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடக்க மாட்டார்கள் என நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது' எனப் பதிவிட்டிருந்தார்.


latest tamil news


'சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக இந்தியாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கும் நிலையில், பாக்., நீதிபதியின் கருத்து, இந்தியா அரசை சாடுவதாக உள்ளது. அவர் மன்னிப்புக் கோர வேண்டும்' எனக் கூறி, சமூக வலைதளங்களில் அவருக்குக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-202002:07:17 IST Report Abuse
Ramesh R கரெக்ட்
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-202012:34:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு, மக்கள் அச்சம் கொள்ளக் கூடாது. நீதிமன்றம் மக்களின் உரிமையைக் காக்கவே இருக்கிறது. அதனால் போராட்டம் நடத்த நினைத்தால் அனுமதி கேளுங்கள். கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள்// இதை இங்கிருக்கும் உங்கூட்டத்திற்கு சொல்லுங்கள். நீதிமன்றம் அனுமதி மறுத்த பிறகும் நாட்டை சுடுகாடாக்கி கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-202012:31:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாகிஸ்தானில் மக்களுக்கு என்ன சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உலகத்திற்கே தெரியும் , இதில் சொல்ல வந்து விட்டான் , 15 வயது சிறுமியை கடத்தி , கட்டாய மதமாற்றம் , கட்டாய ஒப்பந்தம் , கட்டாய உடலுறவு கொண்டது ஷரியத் சட்டப்படி செல்லும் என்று கூறிய கேவலமான நீதிபதிகள் தான் இவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X