பொது செய்தி

இந்தியா

லஷ்கர்-இ-தொய்பாவின் சதி:மும்பை போலீஸ் அதிகாரி அம்பலம்

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 லஷ்கர்-இ-தொய்பா,மும்பை ,போலீஸ் ,அதிகாரி அம்பலம்

மும்பை: மும்பை தாக்குதலை இந்து பயங்கரவாத தாக்குதலாக காண்பிக்க லஷ்கர் இ தொய்பா முயற்சித்தது என மும்பை முன்னாள் காவல் துறை அதிகாரி ராகேஷ் மரியா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் குறித்து ராகேஷ் மரியா தனது ' லெட் மீ சே' என்ற புத்தகத்தில் கூறி இருப்பதாவது: மும்பையில் 2008 ம் ஆண்டு நவ.26 ம் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாயினர் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


latest tamil news


இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் என்பவன் உயிருடன் பிடிக்கப்பட்டான். அப்போது அவர் கையில் சிவப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது. சமீர் சவுத்ரி என்ற பெயரில் ஒரு அடையாள அட்டையும் அவனிடம் இருந்தது. இதன் மூலம் அவன் சார்ந்திருந்த லஷ் கர் இ தொய்பா இயக்கம், மும்பை தாக்குதலை இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக சித்தரிக்க முயன்றுள்ளது. கசாப்பை இந்து என்று மக்கள் நினைத்திருப்பர். ஊடகங்கள் அது இந்து பயங்கரவாதம் என குற்றம்சாட்டி இருக்கும்.
காவலர் துக்காராம் ஓம்பிளின்
பயங்கரவாத தாக்குதலின் போது அஜ்மல் கசாப்பை உயிருடன் பிடித்து தன் உயிரை நீத்த மும்பை போலீசான துக்காராம் ஓம்பிளின் தியாகம் முக்கியமானது என ராகேஷ் மரியா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கசாப்பின் வீண் நம்பிக்கை


கைது செய்யப்பட்ட பின் கசாப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது இந்தியாவில் மசூதிகள் மூடப்பட்டிருப்பதாக நம்பியதாகவும் கசாப் கூறினான்.
மும்பை மசூதிகளில் தொழுகை நடத்தப்படுவதை நேரில் கசாப்பிடம் போலீசார் காட்டினர் என்றும் புத்தகத்தில் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர் கசாப் கடந்த 2012 ம் ஆண்டில் நவம்பர் 21 -ம் தேதி புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டான்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
19-பிப்-202006:52:57 IST Report Abuse
Cheran Perumal துக்காராம் என்ற அந்த காவலரின் உயிர்த்தியாகம் இந்து மக்களை எவ்வளவு பெரிய பழியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது? காங்கிரசின் கேவலமான, பிரித்தாளும் சூழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது? இந்துக்கள் தங்களை உணராததும் இதற்கு ஒரு காரணம். அப்படி உணராததற்கு காந்திஜியும் ஒரு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya,இந்தியா
18-பிப்-202022:56:51 IST Report Abuse
Rajan திட்டம் போட்டது பக்கிகள், அமல் படுத்தியது காங்கிரஸ் சிதம்பரத்தின் மேற்பார்வையில்
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
18-பிப்-202022:36:58 IST Report Abuse
Sanjay மும்பை தாக்குதல் நிச்சயம் ஜேடுகெட்ட காங்கிரஸ் செய்த சதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X