பொது செய்தி

இந்தியா

ஐ.டி.எஸ்.ஏ., பெயர் மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் என்ற நிறுவனத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிகர் பெயரை சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறி இருப்பதாவது: முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் திறைமையை போற்றும் விதமாக இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் என்ற நிறுவனத்திற்கு மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிபன்ஸ் ஸ்டடீஸ் அண்டு அனலைசிஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



அவரது பதவி காலத்தில் ஜம்முகாஷ்மீரின் பதன்கோட் மற்றும் ஊரி தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டத்தை அமல் படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும் . இவ்வாறு அவர் கூறினார்.

மனோகர் பாரிக்கர் 2014 - 2017 வரையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். 2017 - ல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - chennai,இந்தியா
19-பிப்-202010:19:10 IST Report Abuse
INDIAN பாரிக்கர் போன்ற நல்ல மனிதரை காண்பது அரிது , கோவா மக்களிடம் அவர் ஒரு கடவுள் போன்றவர், நான்கு முறை கோவா முதல் அமைச்சர் . நிறைய ராணுவ திருத்தங்களை கொண்டுவந்தவர், பிரதம மந்திரியாக மோடியை முன்மொஹிந்தவர். கூகிளில் அவருடைய கடைசி அசெம்பிளி ஸ்பேச்சி தேடி பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
19-பிப்-202008:52:01 IST Report Abuse
suresh kumar அரசியல்வாதிகள் அவரவர் இஷ்ட்டத்திற்கு பெயர் மாற்றுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது வெளிநாட்டில் வேலை தேடி செல்பவர்கள்தான். இந்த புதிய பெயர்களையும் பழைய பெயர்களுடன் எல்லா இடங்களிலும் பதிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Rajan - Alloliya,இந்தியா
19-பிப்-202011:15:48 IST Report Abuse
Rajanஅப்படியா ?? எங்க செர்டிபிகாடே அட்டெஸ்டேஷன் எல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல...
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
19-பிப்-202015:50:22 IST Report Abuse
suresh kumar//அப்படியா ?? எங்க செர்டிபிகாடே அட்டெஸ்டேஷன் எல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல...// இங்கே காலேஜ் / யுனிவர்சிட்டி / கோர்ஸ் பதிவு செய்யப்படாததால் (accreditation) எத்தனையோ இன்ஜினியர்கள் பட்டம், மார்க், அறிவு எல்லாம் இருந்தும் இன்ஜினியர் விசா கிடைக்காமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துகொண்டுள்ளார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
19-பிப்-202006:55:45 IST Report Abuse
Nallavan Nallavan அரசுத் திட்டங்களுக்கெல்லாம் நேரு குடும்பத்துப் பெயரா என்று கேட்ட பாஜக செய்யும் வேலை .....
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
19-பிப்-202011:37:46 IST Report Abuse
Ram Sekarதிறமை கொண்டவர் மனோகர். பாஜக செய்தது சரி இல்லை தான். வேணுமின்னா வருத்தப்படும் நபர்களின் மன சாந்திக்கு, திருட்டு, ஏமாற்றும் குற்றங்கள் சம்பந்தமான IPC பிரிவுகளுக்கு "KPC " என்று வைத்துவிடலாம். அதான்பா "கட்டுமரம் பீனல் கோட்" என்பது அனைவராலும் ஏகமனதாக அன்போடு ஏற்றுக்கொள்ளப்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X