ரிக் ஷா ஓட்டுனருக்கு பிரதமர் மோடி பாராட்டு

Added : பிப் 18, 2020
Share
Advertisement
 ரிக் ஷா ஓட்டுனருக்கு  பிரதமர் மோடி பாராட்டு

வாரணாசி :வாரணாசி சென்ற பிரதமர் மோடி, தன் மகள் திருமண அழைப்பிதழை அனுப்பிய ரிக் ஷா ஓட்டுனர் மங்கள் கேவாட்டை அழைத்து, அவரது துாய்மை இந்தியா இயக்கப் பணிகளை பாராட்டினார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதனால், வாரணாசியை சேர்ந்த ரிக் ஷா ஓட்டுனர் மங்கள் கேவாட், தன் மகள் திருமண அழைப்பிதழை தொகுதி எம்.பி.யான பிரதமர் மோடிக்கு அனுப்பினார். அழைப்பிதழை பெற்ற மோடி, மங்கள் கேவாட் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். இந்நிலையில், ௧௬ம் தேதி, வாரணாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்திருந்த மோடி, மங்கள் கேவாட்டை அழைத்து, அவரது குடும்பத்தினர் நலன் குறித்து கேட்டறிந்தார்.

மகள் திருணமத்திற்கு வாழ்த்து அனுப்பிய பிரதமருக்கு, மங்கள் நன்றி கூறினார். மங்கள் வசிக்கும் கிராமத்தில், கங்கை நதியின் துாய்மை பணிகளை சொந்த செலவில் மேற்கொண்டதற்கும், 'ஸ்வச் பாரத் அபியான்' எனும் துாய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து பணியாற்றியதற்கும், மங்கள் கேவாட்டை பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமருடனான சந்திப்பின் போது, மங்கள் கேவாட்டின் மனைவி ரேணு தேவி உடன் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X