நிதிஷ் குமார் யார் பக்கம்? பிரஷாந்த் கிஷோர் கேள்வி

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (7+ 45)
Share
Advertisement
பாத் பீஹார் கி, நிதிஷ்குமார்,  பாட்னா, பிரஷாந்த்கிஷோர், கேள்வி, விழிப்புணர்வுபிரசாரம்

பாட்னா : ''பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், காந்தி வழியை பின்பற்றுகிறாரா அல்லது கோட்சே வழியில் செல்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்,'' என, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, பிரபல தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. பிரபல தேர்தல் நிபுணரான பிரஷாந்த் கிஷோர், கட்சியின் துணைத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் நிதிஷ் குமாருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாட்னாவில், அவர் நேற்று கூறியதாவது:மஹாத்மா காந்தி, ஜெயபிரகாஷ் நாராயண், லோஹியாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக, நிதிஷ் குமார் கூறி வருகிறார். அதே நேரத்தில், மஹாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை ஆதரிக்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார். நீங்கள் பா.ஜ.,வுடனான கூட்டணியை தொடரலாம். ஆனால், யாருடைய வழியை பின்பற்றுகிறீர்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும்.

அவருடைய சிந்தனை, சிந்தாத்தம் வேறு; என்னுடையது வேறு. அதனால் தான், பிரிய வேண்டியதாயிற்று. பீஹார், 2005ல் மிகவும் ஏழை மாநிலமாக இருந்தது. கடந்த, 15 ஆண்டுகளால், சில வளர்ச்சி திட்டங்கள் நடந்தாலும், அது போதுமான வேகத்தில் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.அரசியலில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 'பாத் பீஹார் கி' எனப்படும், பீஹார் குறித்த பேச்சு என்ற, விழிப்புணர்வு பிரசாரத்தை, மாநிலம் முழுவதும், நாளை முதல் துவக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-பிப்-202017:48:16 IST Report Abuse
Malick Raja Mr.Nithish will not spell out anything now until Election . once d surely he will aside PJP .
Rate this:
Share this comment
Cancel
sudharman - chennai,இந்தியா
19-பிப்-202016:08:32 IST Report Abuse
sudharman 15 வருஷமா வளர்ச்சி இல்லை. சரி... இந்த 5 வருஷத்துக்கு முன்னாடி ஏன் ஆலோசனை தந்திங்க. சரி இல்லாதவர்க்கு ஏன் கொடுத்தீங்க// அவரும் உங்களை கட்சி சேர்த்து பதவி கொடுத்தாரு. இப்ப விலகி கண்டனம் தெரிவிக்கிறீங்க.. அப்போதே அவரு பாஜக கூட தானே கூட்டு பொரியல் வைச்சாரு. அப்ப நல்ல நல்ல சாப்பிடுங்க.. இப்ப அஜிரணம். கட்சி வேற ஆரம்பிக்க போறத வேற தகவல். ஜமாய் இப்ப புரியும் ஆலோசனையும் கட்சி நடத்தும் விதமும். ஆசை யாரை விட்டது வா ராஜா வா...
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
19-பிப்-202013:34:02 IST Report Abuse
s t rajan இவர் யார் பக்கம் ? பணம் குடுக்கறவங்க பக்கம் எல்லாம் சாயும் இவரு எந்த "காந்தி"யைச் சொல்றாரு. இவர் எதுல நிபுணர் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X