அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
 DMK, MLA, Exit, CAA, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், வெளிநடப்பு

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் மீது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு கொண்டு வந்த, உரிமை மீறல் பிரச்னையை, சபாநாயகர் தனபால் தள்ளுபடி செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, அமைச்சர் பாண்டியராஜன் மீது, உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்தார்.
அதற்கு, சபாநாயகர் தனபால் அனுமதி அளித்தார். அதன்மீது நடந்த விவாதம்:


தி.மு.க., - தங்கம் தென்னரசு:



சட்டசபையில், ஜனவரி, 8ல், இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார். அப்போது, 'இரட்டை குடியுரிமை வழங்க சாத்தியமுள்ளது' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.ஆனால், பார்லிமென்டில் மத்திய அமைச்சர், 'இரட்டை குடியுரிமை வழங்க, இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை' என, தெளிவாக கூறியுள்ளார். சட்டசபையில் அமைச்சர் உள்நோக்கத்துடன், தவறான தகவலை தந்து உள்ளார். இது, சபை உரிமை மீறல். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் பாண்டியராஜன்:



இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது, தமிழக அரசின் கொள்கை. இது, கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளது; அதையே தெரிவித்தேன். ஏற்கனவே, 1964, 1974ம் ஆண்டுகளில், இந்தியா வந்த இலங்கை தமிழர்கள், 9.75 லட்சம் பேருக்கு, குடியுரிமை வழங்குவது தொடர்பாக, இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, 4.61 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்குவதில், ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தொடர்கிறோம். இலங்கை வடக்கு மாகாண முதல்வர், தமிழக அரசின் நிலைபாட்டை வரவேற்றுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வதற்காக, அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


சபாநாயகர் தனபால்:



தங்கம் தென்னரசு கொண்டு வந்த, உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, அமைச்சர் விரிவாக பதில் அளித்துள்ளார். இதில், எவ்வித அவை உரிமை மீறல் இல்லை.இவ்வாறு, சபாநாயகர் கூறியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-பிப்-202020:49:35 IST Report Abuse
Natarajan Ramanathan அம்மாவை பார்த்து தீயசக்தி பயந்து நடுங்கிய காலம் போய் இப்போது எடப்பாடியை பார்த்து ஒரு டெட்பாடியே இந்த அளவுக்கு நடுங்குகிறது.....ஹாஹா
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-பிப்-202018:34:20 IST Report Abuse
தமிழ் மைந்தன் படித்தவனை பார்த்தால் எங்கே தன்னிடம் பேனாவை கொடுத்து எழுத சொல்லி விடுவானோ என படிக்காதவன் ஓடி ஒழிந்து கொள்வான்.....இது போலவே இதுவும்......ஹி..ஹி...ஹி
Rate this:
Share this comment
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
19-பிப்-202018:21:04 IST Report Abuse
K.ANBARASAN வெளிநடப்பு செய்தால் மாச சம்பளத்தில் இருந்து MLA க்களுக்கு சம்பளம் கிடையாது -கழித்து கொள்ளப்படும் என்று சட்டம் வர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X