அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழிவின் பாதையில் தி.மு.க., : கமல் கட்சி கடும் கோபம்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
 அழிவின், பாதை, தி.மு.க., ,கமல் கட்சி, கடும் கோபம், அழிவின் பள்ளத்தாக்கு,செஞ்சோற்றுக் கடன்

சென்னை : 'ஆணவத்தின் உச்சியிலிருந்து, அழிவின் பள்ளத்தாக்கில், தி.மு.க., விரைவில் விழும்' என, மக்கள் நீதி மையம் கட்சி கூறியுள்ளது.இது குறித்து, அக்கட்சியின் ஆதி திராவிடர் நல அணி செயலர் பூஜை ஜெகதீஷ்குமார் அறிக்கை:
அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட இனத்திற்கும் வழி காட்டியவர். 50 ஆண்டுகளாக, தமிழகத்தை ஆண்டவர்கள் நினைத்தாலும், அதில் கை வைத்திருக்க முடியாது. கண்டிப்புநிலைமை இப்படி இருக்கையில், சட்டம் கொடுத்த வாய்ப்பை, பிச்சை போட்டதாக, தி.மு.க.,வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, அந்தக் கால ஜமீன்தனத்தோடு, ஆணவமாக கருத்து கூறியிருப்பதை, வன்மையாக கண்டிக்கிறோம்.

கட்சிச் செயலர் கூறியக் கருத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு மிகச் சாதாரணமாக தோன்றியிருப்பது வருந்தத்தக்கது. ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தால் போதும் என நினைத்தது, கண்டனத்திற்குரியது. இந்த நேரத்தில், தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், செஞ்சோற்றுக் கடனால் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது.இந்த நேரத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும், இவர்களை அடையாளம் காண வேண்டும்.


ஆணவம்



குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேர்தல் நேரத்தில், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது, நிதியல்ல; வேறொன்று என்றும், நாளை, ஆர்.எஸ்.பாரதி கூறலாம்.'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' எனக் கூறிய அண்ணாதுரை ஆரம்பித்தக் கட்சி, ஆணவத்தின் உச்சியிலிருந்து, அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-பிப்-202017:25:48 IST Report Abuse
Endrum Indian என்ன ஒரு அழகான சிம்பல் அநீதி மையத்திற்கு ஒருவன் கை ஒருவன் பிடித்து ஞமலி தன் வால் தொட தான் சுழலுமே அதை போல இருக்கின்றது
Rate this:
Share this comment
Cancel
arivu jeevi edhirppaalan - chennai,இந்தியா
20-பிப்-202021:48:28 IST Report Abuse
arivu jeevi edhirppaalan தமிழகத்தில் தலித்துகள் எங்கெல்லாம் தனியாக கட்சி நடத்துகிறார்களா அவர்கள் திமுகவை எப்போதாவது அல்லது எப்பொழுதும் அண்டி பிழைத்து ஒன்றோ அல்லது இரண்டோ சட்டசபை உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும்போது, திமுகவினர் இப்படியும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். ஊடகங்களை பற்றி சொல்லவே வேண்டாம் அவர் சொன்ன ரெட் லைட் மீடியாக்களில் திமுகவினரின் ஊடகங்களும் அடக்கம் என்பது பாரதியின் நேர்மையான பக்கத்தை பிரதிபலிக்கிறது.கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா என்பதை பொறுத்து தான் பாக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
20-பிப்-202011:48:45 IST Report Abuse
Swaminathan Chandramouli ஏன்கண்டிக்கவில்லை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X