காங்கிரசில் உச்சத்தை எட்டியது கோஷ்டி பூசல் தகராறு: குழாயடி சண்டையை மிஞ்சிய வார்த்தை போர்

Updated : பிப் 20, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
 காங்., உச்சம்,கோஷ்டி பூசல்,  தகராறு,  குழாயடி சண்டை, வார்த்தை போர்

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முக்கியநிர்வாகிகள், ஒருவரை ஒருவர், வாய்க்கு வந்தபடி சரமாரியாக திட்டி தீர்ப்பது, மேலிட தலைவர்களுக்கு கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ், மிகவும் பழமையான கட்சி. மத்தியில், அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி என்ற பெருமையும் அதற்கு உண்டு. பெரும்பாலான மாநிலங்களிலும், காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது.மாநில கட்சிகளின் அபார வளர்ச்சி, பா.ஜ., வின் விஸ்வரூப வளர்ச்சி போன்ற காரணங்களால், காங்கிரஸ், இப்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது.தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோற்றதும், அந்த கட்சிக்கு பின்னடைவையும், கட்சி நிர்வாகிகளுக்கு சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றை மிஞ்சும் வகையில், கோஷ்டி பூசலும் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னும், கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருந்தாலும், மேலிடத் தலைவர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, நிர்வாகிகள் செயல்பட்டு வந்தனர்.


ஆத்திரம்

தற்போது, எதைப் பற்றியும் கவலைப்படாமல், குழாயடியில் நடக்கும் சண்டை போல், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, காங்., நிர்வாகிகள், பொதுவெளிகளில் வெளிப்படையாகவே வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த நிர்வாகியான மிலிந்த் தியோரா, டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வாலை பாராட்டியும், புகழ்ந்தும், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு மூத்த தலைவரான அஜய் மக்கான், 'நம் கட்சியை வீழ்த்தியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மிலிந்த் தியோரா போன்றவர்கள், காங்கிரசிலிருந்து வெளியேறலாம்' என, ஆவேசமாக கருத்து பதிவிட்டிருந்தார்.

ஆம் ஆத்மி வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்த காங்., மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு, டில்லி காங்கிரசின் மகளிர் அணி தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார். மூத்த தலைவர்கள் இவ்வாறு பகிரங்கமாக மோதிய நேரத்தில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல், வீதிக்கு வந்தது.


மோதல்ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் முக்கிய பிரமுகரான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வெடித்தது.'லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணமே, சச்சின் பைலட்டின் உள்குத்து வேலை தான்' என, பகிரங்கமாக சாடினார் அசோக் கெலாட். பதிலுக்கு, சச்சின் பைலட்டும் வரிந்து கட்டினார்.'ஜோத்பூரில், அரசு மருத்துவமனைகளில், 100க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்ததற்கு, கெலாட்டின் திறமையற்ற நிர்வாகமே காரணம்' என, வெடித்தார்.

மத்திய பிரதேச காங்கிரசும், முதல்வர் கமல்நாத்துக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையிலான கோஷ்டி பூசலால் கலகலத்து கிடக்கிறது.'தேர்தலின்போது அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் கமல்நாத் நிறைவேற்றவில்லை' என, எதிர்க்கட்சி தலைவர் போல் குற்றம் சாட்டினார் சிந்தியா. கமல்நாத்தோ, 'வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துங்களேன் பார்க்கலாம்' என, ஆவேசப்பட்டார்.


விரக்தி


நாடு முழுவதும் காங்கிரசுக்குள் நடக்கும் இந்த தகராறை சரி செய்ய முடியாமல், காங்., மேலிட தலைவர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.பலமுறை கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும்,அதை யாரும் பொருட்படுத்துவதாக தெரிய வில்லை.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறிய தாவது:கட்சியின் தேசிய தலைவராக செல்வாக்கும், கண்டிப்பும் மிகுந்த தலைவர் நியமிக்கப் படாதது தான், கோஷ்டி பூசல் அதிகரித்து உள்ளதற்கு முக்கிய காரணம்.தொடர்ச்சியாக இரண்டு லோக்சபா தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியும், கட்சி நிர்வாகிகளிடம் விரக்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலும், நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில், காங்., மேலிட தலைவர்கள் உடனடியாக ஈடுபடாவிட்டால், காங்கிரசுக்கு மேலும்பின்னடைவு ஏற்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
19-பிப்-202016:56:24 IST Report Abuse
Baskar இதெல்லாம் நடக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி என்பதே மக்களுக்கு தெரியாது. இப்படியெல்லாம் நடந்தால் காங்கிரஸ் கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது என்பது மக்களுக்கு புரியும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-202015:43:17 IST Report Abuse
ருத்ரா கலகலப்பூ கைகலபில் முடிந்தால் மகிழ்ச்சி மற்ற அணியினருக்கு. proceed.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-202012:52:34 IST Report Abuse
Bhaskaran கஷ்டப்பட்டது பைலட் நோகாம நொங்கு தின்றது கெலாட் .வயித்தெரிச்சல் .அதேமாதிரி ஊழல் கமல்நாத் தொடர்ந்தால்அங்கேயும் கட்சிக்கு சங்குதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X