சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : பிப் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: சென்னை மாநகராட்சி மாணவர்களுக்கு மட்டும், காலையில் சத்துணவு கொடுக்கும் திட்டத்தை, 'இஸ்கான்' என்ற ஹிந்து அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்காக, சென்னையில், 500 கோடி ரூபாய் நிலம், தாரை வார்க்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை, தமிழக அரசே ஏற்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்பதற்காகத் தானே, தனியார் அமைப்பிடம், இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது... ரியல் எஸ்டேட் புரோக்கர் போல, 5௦௦ கோடி ரூபாய் நிலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது என்கிறீர்களே, 'சைடில்' அந்த தொழிலும் பார்க்கிறீர்களோ என்ற, 'டவுட்' தொண்டர்களுக்கு ஏற்பட்டு விடப் போகிறது; கவனம் தேவை!


இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: வேண்டுமென்றே சில சக்திகளின் துாண்டுதலால் தான், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளி, சமூக நல்லிணக்கத்தை காப்பாற்ற, முஸ்லிம் சகோதர, சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில், சிறுபான்மையின சகோதர, சகோதரிகளுக்கு எதிரான, எந்த ஒரு செயலையும், எங்கள் அரசு அனுமதிக்காது.

'டவுட்' தனபாலு: சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போலவும், டில்லியில் நடக்கும், ஷாஹீன் பாக் போராட்டம் போலவும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தை, எதிர்க்கட்சியினர் வர்ணித்து, அங்கு சென்று, ஆதரவாக பேசி, துாண்டி வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது என்பதற்காகத் தான், இப்படி வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கிறீர்கள்; இதன் பின், அதிரடி நடவடிக்கை இருக்கும் என்பது, 'டவுட்'டே இல்லாமல் புரிகிறது.


த.மா.கா., தலைவர் வாசன்:கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில், பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே, அந்த பூனையை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை சென்னை துறைமுகம் மேற்கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: சீனாவிலிருந்து கொரோனா வைரஸ், இங்கு பரவி விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், பூனையை உடனடியாக திருப்பி அனுப்பி வேண்டும் என, அவசரமாக கோருகிறீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. வளர்ச்சி அடைந்த சீனாவே, அந்த வைரசுக்கு அலறும் நிலையில், இந்தியாவில் பரவினால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதில் எவ்வித, 'டவுட்'டும், யாருக்கும் இருக்க முடியாது. அதனால் தான், 'பூனை வந்தது வதந்தி' என, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, அவசரமாக அறிக்கை அளித்து விட்டீர்கள் போலும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-பிப்-202006:06:26 IST Report Abuse
D.Ambujavalli தன் கையாலாகாத்தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மதிய உணவுத் திட்டத்தைக் கைமாற்றி விட்டது அரசு பொருள்களுக்கு அவர்கள் வைத்ததுதான் விலை கேட்டதைக் கொடுத்துவிட்டு போட்டதைத் தின்ன வைக்க வேண்டும் இன்னொரு கிறிஸ்டி நிறுவனமாக மாற எத்தனை நாளாகும்?
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
19-பிப்-202005:06:43 IST Report Abuse
Krish இஸ்கானுக்கு நிலம் அளித்தால் அது நிச்சயம் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். அது தனி நபர் நிறுவனம் இல்லை.. பெங்களூரில் அவர்கள் மத்திய உணவு அளிக்கிறார்கள். அரசு பள்ளிகளுக்கு நிறைய மாணவர் வந்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X