தப்புவாரா பட்னவிஸ்? :தீர்ப்பு ஒத்தி வைப்பு| Dinamalar

தப்புவாரா பட்னவிஸ்? :தீர்ப்பு ஒத்தி வைப்பு

Updated : பிப் 18, 2020 | Added : பிப் 18, 2020 | கருத்துகள் (1)
Share
தப்புவாரா பட்னவிஸ்? :தீர்ப்பு ஒத்தி வைப்பு

புதுடில்லி : பிரமாண பத்திரத்தில் குற்ற விபரங்களை மறைத்த விவகாரத்தில், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.


latest tamil news



மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ., பிரமுகருமான தேவேந்திர பட்னவிஸ், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு மோசடி வழக்குகள் குறித்த விபரங்களை, அவர் குறிப்பிடவில்லை. இது தொடர்பாக, நாக்பூரைச் சேர்ந்த சதீஷ் உகே தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'பிரமாண பத்திரத்தில் குற்ற விபரங்களை தெரிவிக்காதது குற்றம். எனவே, பட்னவிஸ், விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என, 2019ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, பட்னவிஸ் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தபோது, பட்னவிஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டதாவது:பட்னவிஸ் மீதான இரண்டு வழக்குகளிலும், அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அவர் குற்றவாளி என்றும் நீதிமன்றம்தீர்ப்பளிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே அளிக்கப்பட் தீர்ப்பு, பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X