விவாகரத்து வழக்கில் இழப்பு குழந்தைக்குத்தான்: உச்ச நீதிமன்றம்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
# விவாகரத்து,வழக்கு,இழப்பு குழந்தை,: உச்ச நீதிமன்றம் #

புதுடில்லி 'கணவன், மனைவியின் விவாகரத்து வழக்கில் எப்போதும் இழப்பு அவர்களின் குழந்தைக்குத்தான்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோரி அடங்கி அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கணவன், மனைவி பிரச்னையில், நீதிமன்றங்கள் முதலில் மத்தியஸ்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். அது பலனளிக்காத பட்சத்தில், எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவிற்கு வழக்கை முடிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், வழக்கு நீடிக்கும் வரையில், ஒவ்வொரு நாளும் குழந்தைக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். கணவன், மனைவி விவாகரத்து வழக்கில், எப்போதும் இழப்பு, அவர்கள் பெற்ற குழந்தைக்குத்தான்.


latest tamil newsபெற்றோரின் பிரிவால், குழந்தை மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் இழக்க நேரிடுகிறது. செய்யாத தவறுக்காக குழந்தை பாதிக்கப்படுகிறது. அதனால், குழந்தை யாரிடம் இருந்தால் நல்லது என சீர்துாக்கிப் பார்த்து, தீர்ப்பளிக்க வேண்டும். குழந்தையின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த பின்தான், இதர ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai Jeyaram - Tirunelveli,இந்தியா
19-பிப்-202012:59:41 IST Report Abuse
Nellai Jeyaram குழந்தையின் நலன் கருதி குழந்தை பெற்ற தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்க கூடாது என்று சட்டம் இயற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-202012:13:25 IST Report Abuse
ரஹீம் எனக்கு ஒரு விஷயம் புரியல. ஒருத்தர் வக்கீலா இருக்கார், அவருக்கு கேஸ் வேணும். இங்க நியாயம் அநியாயம் பாக்காம வந்த கேச புடிச்சு வச்சிகிட்டு வண்டிய ஓட்டுவாரு. கேஸ் எத்தனை நாள் ஓடுதோ அத்தனை நாள் அவருக்கு வருமானம். நாளைக்கு அவரே ஜட்ஜாயிட்றாறு. கேச வேகமா முடிக்கனும்குராறு. அவரு பணம் வாங்காம தீர்ப்பு சொல்வாரா? அவங்களுக்கு சம்பளம் எவ்வளவு இருக்கும்? எப்பிடி தாராளமா சொத்து இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
19-பிப்-202012:02:33 IST Report Abuse
baalaa இதே நீதி மன்றம் தான் கள்ள உறவு குற்றம் இல்லை என்று தீர்ப்பு சொன்னது .... இவர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் தீர்ப்பாக சொல்வது அல்லது கருத்து தெரிவிப்பது .... வெளங்கிடும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X