ஐ.நா. அமைதிப்படை நிதி: இந்தியா குற்றச்சாட்டு

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஐ நா  #அமைதிப்படை ,நிதி: இந்தியா, குற்றச்சாட்டு

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை செயல்பாட்டிற்கான சிறப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் பேசியதாவது:ஐக்கிய நாடுகள் சபைக்கு நிலுவையின்றி சந்தா செலுத்தும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உள்நாட்டு சண்டை உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் ஐ.நா.அமைதிப் படை நிலைகொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள இந்திய ராணுவத்தின் சேவைக்காக வழங்க வேண்டிய தொகை சரிவர வழங்கப்படுவதில்லை.


latest tamil news


கடந்த 2019 மார்ச் நிலவரப்படி இந்தியாவுக்கு ஐ.நா. 270 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலுவைதான் அதிகம். அதுபோல ஒரு நாட்டில் அமைதிப் படையினர் பணி முடிந்து திரும்பிய பின்பும் அதில் பங்கேற்ற நாடுகளுக்கான நிலுவை பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. அமைதிப் படை செயல்பாடுகளுக்காக திரட்டப்படும் நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விடுவது தவறான கணக்கீட்டு நடைமுறையாகும்.

அத்துடன் இத்தகைய போக்கு ஐ.நா. மீதான நம்பிக்கை குறைய வழிவகுக்கும். அமைதிப் படையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அப்படையின் குறைநிறைகளை அறிந்து தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
19-பிப்-202015:46:50 IST Report Abuse
Ravichandran ஐ நாவிற்கு இந்தியா தேவையில்லாமல் செலவு செய்வதாக தோன்றுகிறது. இது வரை பெரிய மனிதஉரிமை மீறல்களை கூட தடுக்கமுடியாது அமைப்பு, இலங்கை விஷயத்திலேயே இதன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது, கொல்லப்பட்ட ரெண்டுலட்சம் தமிழின மக்களுக்கு பதில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
19-பிப்-202014:33:32 IST Report Abuse
Anand சமீபத்தில் இதன் தலைவன் பாகிஸ்தான் போனோமா பீப் பிரியாணி தின்றோமா என இருப்பதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்து இந்தியாவிடம் வாங்கி கட்டிக்கொண்டான். இந்த மாதிரி ஐநா தலைவனும் ஐநாவும் தேவையில்லை. கலைத்துவிட்டு இந்தியாவிற்கும் வீட்டோ அதிகாரம் வழங்கும் புதிய அமைப்பு தொடங்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
19-பிப்-202010:23:20 IST Report Abuse
Kundalakesi We have to deduct these charges while paying their annual charges
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X