ராமர் கோவில் அறக்கட்டளை இன்று முக்கிய ஆலோசனை| Dinamalar

ராமர் கோவில் அறக்கட்டளை இன்று முக்கிய ஆலோசனை

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (6)
Share

புதுடில்லி : அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரதமரால் அறிவிக்கப்பட்டஅறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் இன்று நடக்கவுள்ளது.latest tamil newsஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில், ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளைமேற்கொள்ள மத்திய அரசு அறக்கட்டளை அமைத்துள்ளது. 'ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட்' என்ற பெயரில் அமைக்கப்படும் அந்த அறக்கட்டளையில், ஏழு பேர் உறுப்பினர்களாகவும், மூன்று பேர் அறங்காவலர்களாகவும், ஐந்து பேர் நியமன உறுப்பினர்களாகவும் அங்கம் வகிக்கின்றனர்.
அறக்கட்டளையின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டில்லியில் நடக்கவுள்ளது. மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லத்தில், இன்று மாலை இந்த ஆலோசனை நடக்கவுள்ளது. ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹத் நிருத்ய கோபால்தாஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக, அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ராம நவமி நாளான, வரும் ஏப்., 2 மற்றும் அக் ஷய திரிதியை நாளான, ஏப்., 26 ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நாளில், ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள்துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil newsமுஸ்லிம் அமைப்புகள் சார்பில், மூத்த வழக்கறிஞர், எம்.ஆர்.ஷாம்சத், ராமர் கோவில்அறக்கட்டளைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள, 5 ஏக்கர் நிலம், மயானமாக இருந்தது. 1885ல் நடந்தகலவரத்தின் போது இறந்த, 75 முஸ்லிம்களின் உடல்கள், இங்கு புதைக்கப்பட்டுள்ளன. இங்கு ராமர் கோவில் கட்டுவது, ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும், சனாதன தர்மத்துக்கு எதிரானது. இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X