பொது செய்தி

இந்தியா

'மனைவி நாயாக பிறப்பாள்': சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
menstruating_women,cooking_food,husband,reborn,dog,மாதவிடாய்,மனைவி,சமையல்,கணவர்,நாய்

ஆமதாபாத்: ''மாதவிடாய் காலத்தில் சமைத்த உணவை கணவருக்கு தரும் மனைவி அடுத்த பிறவியில் நாயாக பிறப்பாள்'' என சுவாமி கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி பேசும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் புஜ் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் நிர்வாகம் 'எஸ்.எஸ்.ஜி.ஐ.' என்ற பெண்கள் சுயநிதிக் கல்லுாரி மற்றும் விடுதியை நடத்தி வருகிறது. இங்கு மாணவியர் மாதவிடாய் காலத்தில் சக மாணவியருடன் சேர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இத்தடையை சிலர் மீறியதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து 60 மாணவியரின் உள்ளாடைகளை கழற்றி சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் அம்பலமானதை அடுத்து கல்லுாரியின் பெண் முதல்வர் விடுதியின் பெண் வார்டன் பெண் பணியாளர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news



இந்நிலையில் கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜியின் வீடியோ பேச்சால் சுவாமி நாராயண் கோவில் நிர்வாகம் மீண்டும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அதில் கிருஷ்ணா ஸ்வரூப் தாஸ்ஜி பேசியுள்ளதாவது: பெண்களின் மாதவிடாய் காலம் தபம் செய்யும் காலம் போன்றது. இதை பெண்கள் அறிவதில்லை. அப்போது அவர்கள் உணவு சமைக்கக் கூடாது. அவர்கள் உணவு சமைத்து கணவருக்கு கொடுத்தால் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பார்கள். அந்த உணவை சாப்பிடும் கணவர்கள் அடுத்த பிறவியில் காளை மாடாக பிறப்பார்கள். இதை சாஸ்திரம் கூறுகிறது. அதனால் ஆண்கள் சமையல் கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sri - trichy,இந்தியா
22-பிப்-202015:37:47 IST Report Abuse
sri அவர் சொன்னதை பூரா படிக்காத மக்கள் , ஆண்களை சமையல் கத்துக்கோ அப்டிங்கறாரு ,பெண்களை ரெஸ்ட் எடுங்கறாரு ,இது தப்பா. சும்மா பயமுறுத்திரத்துக்காக நாய்,காளை அப்படினு சொல்லியிருக்காரு .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-202013:43:11 IST Report Abuse
Bhaskaran காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Ragu - City,இந்தியா
19-பிப்-202019:48:02 IST Report Abuse
Ragu ஹல்லோ , இவர் சாஸ்திர விதியை சொன்னால் சில குசும்பிகளுக்கு கஷ்டமாய் இருப்பது இயற்கைதான். இவர்கள், இஷ்டப்படி இருப்பதைத்தான் உண்மையாக இருப்பது என்று இவர்கள் வேண்டுமானால் கட்டிக்கொள்ளட்டும் . இருண்மை கசக்கும் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X