மனைவி நாயாக பிறப்பாள்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'மனைவி நாயாக பிறப்பாள்': சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (65)
Share
menstruating_women,cooking_food,husband,reborn,dog,மாதவிடாய்,மனைவி,சமையல்,கணவர்,நாய்

ஆமதாபாத்: ''மாதவிடாய் காலத்தில் சமைத்த உணவை கணவருக்கு தரும் மனைவி அடுத்த பிறவியில் நாயாக பிறப்பாள்'' என சுவாமி கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி பேசும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் புஜ் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் நிர்வாகம் 'எஸ்.எஸ்.ஜி.ஐ.' என்ற பெண்கள் சுயநிதிக் கல்லுாரி மற்றும் விடுதியை நடத்தி வருகிறது. இங்கு மாணவியர் மாதவிடாய் காலத்தில் சக மாணவியருடன் சேர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இத்தடையை சிலர் மீறியதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து 60 மாணவியரின் உள்ளாடைகளை கழற்றி சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் அம்பலமானதை அடுத்து கல்லுாரியின் பெண் முதல்வர் விடுதியின் பெண் வார்டன் பெண் பணியாளர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil news



இந்நிலையில் கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜியின் வீடியோ பேச்சால் சுவாமி நாராயண் கோவில் நிர்வாகம் மீண்டும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அதில் கிருஷ்ணா ஸ்வரூப் தாஸ்ஜி பேசியுள்ளதாவது: பெண்களின் மாதவிடாய் காலம் தபம் செய்யும் காலம் போன்றது. இதை பெண்கள் அறிவதில்லை. அப்போது அவர்கள் உணவு சமைக்கக் கூடாது. அவர்கள் உணவு சமைத்து கணவருக்கு கொடுத்தால் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பார்கள். அந்த உணவை சாப்பிடும் கணவர்கள் அடுத்த பிறவியில் காளை மாடாக பிறப்பார்கள். இதை சாஸ்திரம் கூறுகிறது. அதனால் ஆண்கள் சமையல் கற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X