சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
Trump,India_visit,Ahmedabad_visit,US_President,டிரம்ப்,அமெரிக்கஅதிபர்,இந்தியா,வருகை,சுவர்

புதுடில்லி: முக்கிய புள்ளி விபரங்களை மறைப்பதுபோல் அமெரிக்க அதிபரின் வருகைக்காக சுவர் எழுப்பி குடிசைகள் மறைக்கப்படுவதாக காங். கிண்டல் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப். 24 - 25ல் இந்தியாவுக்கு வருகிறார். அப்போது குஜராத்தின் ஆமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக ஆமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில் சுவர் எழுப்பப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து காங். செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது: ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை டன் அடிப்படையிலும் மனித உரிமையை வோல்ட்ஸ் அடிப்படையிலும் வறுமையை சுவற்றின் நீளம் மற்றும் உயரத்தாலும் கணக்கிடப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம். இதுதான் பா.ஜ. கூறும் புதிய இந்தியா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



காங். செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறியுள்ளதாவது: கண்ணாமூச்சி விளையாட்டு பா.ஜ.வுக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. ஜி.டி.பி. வேலைவாய்ப்பின்மை பணவீக்கம் ஆகியவை குறித்த உண்மையான புள்ளி விபரங்களை மறைத்து வருகின்றனர். தற்போது டிரம்ப் வருகைக்காக வறுமையை சுவர் கட்டி மறைக்க பார்க்கிறார்கள். இதுதான் குஜராத் பாணி வளர்ச்சியா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-பிப்-202016:40:41 IST Report Abuse
Endrum Indian சுவர் எழுப்புவதின் உண்மையான காரணம் இது வரை எனக்கு புரியவில்லை???ஒரு வேளை முஸ்லீம் நேரு காங்கிரஸ் முஸ்லிம்களின் துணை கொண்டு இந்த மாதிரி இடத்திலிருந்து ஏதேனும் வெடி குண்டு வீச திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசுக்கு செய்தி வந்திருக்கின்றதா என்ன???
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
19-பிப்-202016:12:54 IST Report Abuse
Ab Cd இவர்கள் ஏழ்மையை ஒழிக்க மாட்டார்கள் மறைப்பவர்கள்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-பிப்-202015:48:20 IST Report Abuse
blocked user ஏழைகள் மீது போலியான அன்புள்ளவர்கள் காந்தி தனது மேலாடையை துறந்தது போல எல்லோரும் மேலாடையை துறக்கலாம். உண்மையான அன்புள்ளவர்கள் அவர்களின் வாழ்க்கை மேம்பட உழைப்பார்கள் - அதைத்தான் கடந்த 6 ஆண்டுகளாக மோடி செய்து வருகிறார். ஏழைகளை மேம்படுத்த ஏராளமான திட்டங்கள். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் நாட்டை திறந்த கழிப்பறையாக வைத்து இருந்தது. இன்று ஓரளவுக்கு மாற்றம் வந்து இருக்கிறது. வங்கிக்கணக்கு இல்லாதோர் ஏராளம் - அதையெல்லாம் கூட மாற்ற முயன்றது மோடிதான் - பொருளாதார பேதைகளான கிங்பின்னோ அல்லது மன்மோகன் சிங்கோ அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X