பொது செய்தி

இந்தியா

டிரம்ப் வருகை எதிரொலி; ஆக்ராவில் சுவரோவியங்கள்

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Trump,ahmedabad,Trump_visit,India,US_president,டிரம்ப்,இந்தியா,வருகை

இந்த செய்தியை கேட்க

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகையை முன்னிட்டு, தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகரில், கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

டிரம்ப், தன் மனைவி மெலினாவுடன் இரண்டு நாள் பயணமாக, 24ம் தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன், குஜராத், உத்தர பிரதேச மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உ.பி., மாநிலம் ஆக்ராவில், தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இதையொட்டி, அந்நகரை அழகுபடுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.


latest tamil news



சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, சுவர்களில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. சாலை தடுப்புகள், சிலைகள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசப்படுகிறது. தாஜ்மகால் அருகே, கலாக்ருதி அரங்கில், 'முகபத் - தாஜ்' என்ற கலாசார நிகழ்ச்சியை, டிரம்ப் பார்த்து ரசிக்க உள்ளார்.

அவர் வருகையையொட்டி, 5,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே, அமெரிக்க பாதுகாப்பு படையைச் சேர்ந்த, 40 பேர், ஆக்ரா வந்து, உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து, சுற்றுப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.


குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்


படேல் ஸ்டேடியத்தில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தில் சிறிய குடிசைப்பகுதி உள்ளது. இங்கு 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதிபர் டிரம்ப் வருகையையொட்டி அந்த குடிசை பகுதிகளை மறைக்கும் விதமாக சுவர் எழுப்பும் பணி சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அந்த குடிசைகளை ஏழு நாட்களுக்குள் காலி செய்யும்படியும், இல்லையெனில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 45 குடும்பங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
19-பிப்-202018:58:31 IST Report Abuse
K.Sugavanam அருமை..அருமை..சுவரோவியம் வரைய ஆரம்பித்து விட்டனர்..நம்ப ஊரை பாத்து ஏளனமா பேசிக்கிட்டே ,இங்க செய்யறமாதிரியே கூச்ச நாச்சம் இல்லாம காப்பி அடிச்சி ஆகிறாளா செய்யுறாங்கப்பா..பாராட்டணும்..சிங்கார ஆமதாவதுக்கு பின்னால சிங்கார ஆக்ரா..தாஜ்மஹாலுமேல வரையாம விட்டாங்க..தப்பிச்சோம்..
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
19-பிப்-202012:11:28 IST Report Abuse
Sankare Eswar இதுதான் இந்தியா. காலில் செருப்பு இல்லாத பெண். உடலிலும் உடையிலும் ஏழ்மை. சுவோரோவியம் ஒரு கேடு. என்ன ஒரு முரண்பாடு.
Rate this:
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
19-பிப்-202012:10:17 IST Report Abuse
sambantham sasikumar குடிசையில் இருப்பவர்கள் எல்லாம் ஏழைகள் அல்லர். எனக்கு தெரிந்து நெறைய மக்கள் வாரிய குடியிருப்பை வாடகைக்கு விட்டு, அடுத்த குடியிருப்புக்காக காத்திருப்பவர்கள் நெறைய. அதனால் தான் தீர விசாரித்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்குங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X