இரண்டாயிரத்தை தாண்டியது கோவிட்-19 பலி

Updated : பிப் 19, 2020 | Added : பிப் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
China,coronavirus,covid19,death_toll,கோவிட்19,சீனா,பலி,கொரோனா,வைரஸ்

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவில், வேகமாக பரவி வரும், கோவிட் 19 எனப்படும் 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,004 ஆக உயர்ந்தது; வைரஸ் தாக்கம் உள்ளோர் எண்ணிக்கை, 74,185 ஆக உயர்ந்தது.

சீனாவின் ஹூபய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு, டிச.,ல், 'கொரோனா' பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து மிகவும் வேகமாக பரவியது. நாட்டின் 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில், இந்த வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதைத் தவிர, ஜப்பான், ஹாங்காங் என, 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும், இந்த வைரஸ் பாதிப்பு பரவியது. சீனாவுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தது.


நேற்று 136 பேர் பலி:


இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலில் தெரிய வந்து, நேற்றுடன், 50 நாட்களாகிறது. இதுவரை, சீனாவில், 2,004 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும், 136 பேர் உயிரிழந்தனர். இதுவரை, 74,185 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,749 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


latest tamil news




இயக்குநர் மரணம்:


கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை, வூஹானில், 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்து வந்த, அந்த மருத்துவமனையின் இயக்குநர் லியூ ஜிமிங்க், வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று உயிரிழந்தார். இது, டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. எங்கே இருக்கிறார்கள் நமது தேச துரோகிகள். சீனாவில் நிகழ்வதால் உடம்பில் உள்ள எல்லா துவாரங்களையும் அடைத்துக் கொண்டுவிட்டனரா. இதே உபியில் நிகழ்ந்திருந்தால் பூமிக்கும் வானத்திற்கும் குதித்திருப்பார்கள்.
Rate this:
Cancel
Muthu -  ( Posted via: Dinamalar Android App )
19-பிப்-202010:52:12 IST Report Abuse
Muthu ஏன் தினமும் இறந்தவர்களின் புள்ளி விவரங்களை மட்டுமே வெளி விடுகிறீர்கள்? இதுவரை நோயிலிருந்து குணமடைந்தவர்கள் 14670 பேர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து குறிப்பிடுங்கள்.
Rate this:
Cancel
raman - Madurai,இந்தியா
19-பிப்-202009:50:45 IST Report Abuse
raman இந்தியா இதுவரை 6 கன்டெய்னர் முகமூடி அனுப்பியது. மருந்தும் அனுப்பியது. சீன தூதர் நன்றியுடன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு ஊடகமும் இதை சொல்ல வில்லை. கம்மிகளும் பாராட்ட மனமில்லை. மோடி எதிர்ப்பு ஒன்றுதான் குறி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X